* சிறிதளவு எப்சம் உப்பை தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம். செடிகள் நன்கு வளரத் தேவையான மெக்னீசியம், சல்பேட் இரண்டையும் இந்த உப்பு கொடுக்கும் . வாரம் ஒருமுறை உபயோக்கிக்கலாம்.
Wednesday, December 31, 2014
Tuesday, December 30, 2014
தேன் நெல்லிக்காய்
தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.
ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்?
பெருங்காயத்தின் மருத்துவக் குணங்கள்....!
பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.
Monday, December 29, 2014
இதயம் காக்கும் மிளகு
பத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது.
தோல் புற்றுநோயை தடுக்கும் இலவங்கம்
இலவங்கம் கிராம்பு என்றும் அழைக்கப்படுகிறது. கிராம்பு எனப்படும் இலவங்கம் வாந்தியை நிறுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய தன்மையுடையது.
உள் உறுப்புக்களைத் தூண்டக் கூடியது, வயிற்றில் சேர்ந்து துன்புறுத்தும் வாயுவைக் கலைத்து வெளியேற்றக் கூடியது, வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைப் போக்க கூடியது, பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது, வயிற்றில் அமிலச் சுரப்பால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க கூடியது,
அஞ்சறை பெட்டி
அஞ்சறை பெட்டியின் அரு மருந்து ரகசியம் :-
அன்றாட வாழ்வில் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப்பொருட்கள் சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தை கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்பவையாகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவ குணம் கொண்ட உணவுக்கலவைதான் தமிழக உணவின் சிறப்பு.
மாமருந்தாகும் மாம்பழம் :-
மாம்பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் ஆயுளையும் நீடிக்கச் செய்யும். இப்பழங்களின் பூர்வீகம் இந்தியாவாகும். ராஜகனியான மாம்பழம் முக்கனிகளில் முதல் கனியாகும். மாம்பழத்தின் பூர்வீகம் தென்னிந்தியா தான். மாம்பழம் பொதுவாக கோடைக் காலத்தில் அதிகம் விளையும். நன்கு கனிந்தமாம்பழத்தை உண்பது நல்லது. மாம்பழம் உடலுக்கு உஷ்ணம் தரும் பழம் தான்.ஆனால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் உள்ள உஷ்ணத்தை விட குறைவு. மாம்பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெறும்வயிற்றில் சாப்பிடக் கூடாது. உணவு உண்டபின் 20 நிமிடம் கழித்துசாப்பிடுவது நல்லது.
முடி உதிர்வு, தலை அரிப்பை போக்கும் பலாக்கொட்டை
பழங்கள் என்றாலே ருசியுடன் கூடிய ரசனை நம் அனைவரையும் ஈர்ப்பதில் அதிசயம் ஏதுமில்லை. நாவுக்கு வேண்டிய ருசியை அளிப்பதோடு, உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களையும், அளிப்பதில் பழங்களே முதன்மை வகிக்கிறது. பழ வகைகளில் மா, பலா, வாழைக்கு முக்கிய இடம் உண்டு. இனிக்க இனிக்க சுவை தரக்கூடிய பழ வரிசைகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கும் பலாப்பழத்தால் ஏற்படும் பலாபலன் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
உடல் நலத்தை பாதுகாக்கும் சில காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
இன்றைய நவீன உலகில், உணவு கூட சத்தின்றி மாறியுள்ளது. இதனாலேயே பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது. இதில், பெரும்பானவர்களுக்கு உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனாலேயே பல டாக்டர்கள், காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்க்க வலியுறுத்துகின்றனர். ஆனாலும், பலரும் சத்தில்லாத காய்கறிகளை மட்டுமே உணவில் சேர்க்கின்றனரே தவிர, சத்தான காய்கறிகளை புறந்தள்ளி விடுகின்றனர். நாம் புறம்தள்ளும் காய்கறிகளில், சத்துகள் மட்டுமல்ல; பல நோய்களுக்கு மருத்துவ சக்தியும் உள்ளது. அந்த வகையில், சில காய்கறிகளும் அதில் உள்ள குணங்களும்
தர்பூசணி
* மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. வெள்ளை பகுதியில்தான்...
உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள்
உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். சரி இப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் உணவுகளை பார்க்கலாம்.
வாழை மரம் மருத்துவம்:-
மருத்துவப் பயன்மிக்க மூலிகைகளுள் வாழையும் ஒன்று. இதில் மலைவாழை, மொந்தன், பூவன், பேயன், ரஸ்தாலி ஆகியவை முக்கியமானவை.
வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:-
* வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன. வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
பாத வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்
கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் இதோ:
நட்சத்திர பழம்
பழங்களின் மருத்துவப் பயன்கள் எண்ணற்றவை. உடலுக்கு நேரடியாக பலனை கொடுப்பவையும் இவையே. நட்சத்திரப் பழத்தின் மருத்துவக் குணங்களை தெரிந்துகொள்வோம்.
பலவித காய்களும் அதன் பலன்களும்
காரட்:
தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இயற்கை மருத்துவம்
* வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும்.
* பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்.
உங்களுக்கு என்ன நோய்?
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்
கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
Wednesday, December 24, 2014
முடக்கற்றான் சூப் & தோசை & ரசம்
தேவையான பொருட்கள்:
முடக்கற்றான் கீரை - 1 கப் துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 3 புளி - எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிதளவு பூண்டு - 1 உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 3 புளி - எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிதளவு பூண்டு - 1 உப்பு - தேவையான அளவு
முடக்கற்றான் கீரை
பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான். இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
Saturday, December 20, 2014
புளித்த ஏப்பம் acid reflux இதிலிருந்து விடுபட ஆலோசனைகள் :!!!
# வெந்தயப் பொடியை மோரில் கலந்து சாப்பிடலாம். வெந்தயக் கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்துக் கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
# சாம்பார் செய்யும்போது வெந்தயத்தையும், துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைத்துக் கடைந்து சாப்பிடலாம்.
புகை பழக்கத்தை விட வேண்டுமா??
தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .
உருளைகிழங்கு சாறு குடித்தால் மூட்டு வலியை விரட்டலாம்
உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும்.
இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்...
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும்.
மலட்டுத்தன்மையை போக்கும் உணவு வகைகள் :-
சோற்றுக்கற்றாழை பாயசம்
என்னென்ன தேவை?
சோற்றுக்கற்றாழையின் உள்ளே இருக்கும் சதை பாகம் - 2 கப், பால் - 2 கப்,
பனைவெல்லம் - தேவைக்கேற்ப, முந்திரி, திராட்சை - 2 டீஸ்பூன், ஏலக்காய் - 2, நெய் - 1 டீஸ்பூன்.
சோற்றுக்கற்றாழையின் உள்ளே இருக்கும் சதை பாகம் - 2 கப், பால் - 2 கப்,
பனைவெல்லம் - தேவைக்கேற்ப, முந்திரி, திராட்சை - 2 டீஸ்பூன், ஏலக்காய் - 2, நெய் - 1 டீஸ்பூன்.
Friday, December 19, 2014
உடற்சூட்டுக்கு-வெந்தயம்
உடற்சூட்டுக்கு.........
வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற் சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். மோரில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் விட்டு சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணிந்து விடும்.
வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற் சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். மோரில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் விட்டு சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணிந்து விடும்.
சீரகத்தின் சில மருத்துவ குணங்கள்:-
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்;
Thursday, December 18, 2014
இயற்கை மருத்துவம்
நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும். இதயமும் வலுவடையும். இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும். குப்பை மேனி இலை, மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளித்தால் தோல் நோய் குணமாகும்.
மது ஏன் குடிக்க கூடாது?
மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகிறது. இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது.
உடல் நலத்தை பாதுகாக்கும் மல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்
மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவம்
சர்க்கரை நோய்க்கு இயற்கை கஷாயம் மிகவும் நல்லது. முள்ளங்கி கிழங்கு 2 எடுத்து கொண்டு நசுக்கி கொள்ள வேண்டும். வேப்பிலை, மா இலைகளை பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர், மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரில் நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாக வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.
Wednesday, December 17, 2014
சிறுநீர் பிரிய
* முருங்கைக்கீரை (ஒரு கைப்பிடி), பார்லி (20 கிராம்), சீரகம் (கால் ஸ்பூன்), மஞ்சள் (சிறிதளவு) ஆகியவற்றை ஒன்றாக்கி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், நீர்க்கட்டு உடைந்து, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
உடல் நலத்தை பாத்துகாக்கும் ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்
ஜாதிக்காய் என்பது ஒரு காரமான, சூடான மற்றும் இனிப்பு சுவை கொண்ட மசாலா பொருளாகும். இது உங்களுடைய சாப்பாட்டிற்கு சுவை, மணத்தை மட்டும் கொடுப்பதில்லை அதோடு உடல் நலத்திற்கு பல வழிகளில் ஊட்டத்தையும் அளிக்கிறது.
முள்ளங்கி
முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்
முள்ளங்கி சமைத்து உண்ணக் கூடிய கிழங்கு இனமாகும். நீண்ட வெண்ணிறக் கிழங்காகக் காய்கறிக் கடைகளில் கிடைக்கும். கிழங்கு, இலை, விதை மருத்துவக் குணம் உடையவை. கிழங்கு சிறுநீரைப் பெருக்கும். குளிர்ச்சியை உண்டாக்கும். இலை பசியைத் தூண்டி சிறுநீரைப் பெருக்கித் தாதுவைப் பலப்படுத்தும்.
Tuesday, December 16, 2014
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
சாமையின் மகத்துவம்
சாமை என்பது சிறுவகை தானியங்களில் ஒன்றாகும், இது ஒரு புல் இனத்தை சார்ந்த பயிராகும், மலை கிராமங்களில் உள்ள மலை கிராம மக்கள் சாமையினை உணவு பொருளாக பயன்படுத்தி வந்தனர். அனைத்து மக்களும் சாமையின் உணவாக சாப்பிட்டு வருகின்றனர். பொதுவாக மக்கள் உணவு பொருளாக பயன்படுத்தி வரும் தானிய வகைகளை பெருவகை தானியம், சிறுவகைதானியம் என இரண்டாக பிரிக்கலாம்.
நெய்...
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.
Monday, December 15, 2014
உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி
உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி
தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,
இயற்கை தரும் மருத்துவ குறிப்புகள் :-
தேன்: சக்தியை கொடுக்கும், இதயத்தை பலப்படுத்தும், இருமலை குணப்படுத்தும், ஹிமோகுளோபினை அதிகப்படுத்தும்.
வெந்தயம்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக்கும்.
உடல் நலத்தை பாத்துகாக்கும் வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்:-
வாழையில் உடல் நலத்தைப் பேணி பாதுகாக்க கூடிய பல்வேறு மருத்துவப் பொருள்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக `செரடோனின்' `நார் எபிநெப்ரின்' `டோபமைன்' என்னும் மருத்துவ சத்துக்கள் மலிந்துள்ளன. இதில் செரடோனின் என்பது ஒருவகை ``ஹார்மோன் ''மட்டுமின்றி உணர்வு கடத்தி ஆகும்.
தாய்ப்பால் சுரக்க
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள் :-
தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் இழக்கும் கலோரியை ஈடுசெய்துவிடலாம்.
முக்கியமாக பயன்படுத்தும் 5 மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள்
முக்கியமாக பயன்படுத்தும் 5 மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள்
Sunday, December 14, 2014
தயிரின் தெரியாத ரசியம்…!!
தயிர் இயற்கையின் அரு மருந்து. பாலிலிருந்து பெறப்படும் தயிரானது மிக எளிதில் ஜீரனமாகும் திறன் கொண்டது. பாலை நாம் எடுத்துக் கொள்ளும் முக்கிய காரணம், அதில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் மற்றும் வைட்டமின் பி தான்.
குழந்தை எது கொடுத்தாலும் சரியாக சாப்பிடுவதில்லை என்ன செய்வது?
கிராமத்தில் “வேண்டா பிள்ளைக்கு வெல்லம் கொடு” என்பார்கள். இது வேண்டாத பிள்ளைக்கு கொடு என்று அர்த்தம் அல்ல. எதை கொடுத்தாலும் சாப்பிடாமல் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லும் பிள்ளைக்கு வெல்லம் கொடு என்று அர்த்தம்.
வயிற்றுப்புண் பற்றிய தகவல்கள்
புண் என்பது உடலின் எந்த ஒரு இடத்திலும் தொடர் சதையினில் பாதிப்பினை ஏற்படுத்தவது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரிச்சை பழம் :-
பித்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் மிக்கது பேரிச்சை. தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். அன்றாடம் பேரிச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.
இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை
இரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாகவும், மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ அதிக அளவு உணர்சிகளை காட்டக்கூடாது. இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்கவேண்டும்.
உடம்பு இளைக்க இஞ்சி சாறு
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
பெண்கள் இடது பக்கம் தான் மூக்குத்தி அணிய வேண்டுமா?
இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு. ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.
'சுக்கு மல்லி காபி'
தேயிலை, காபி போன்ற பானங்களை அருந்துவது நம் நாட்டின் பழக்கமல்ல. அவையெல்லாம் மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே. நம் நாட்டின் பெரும் பகுதிகள் வெப்பமிகுந்த பகுதியாக இருப்பதால், இங்கு வாழ்ந்த நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, மல்லி, பனைவெல்லம் கலந்த பானமும், மாலையில் சுக்கு, மல்லி, மிளகு கலந்த மூலிகை குடிநீர் பானமும், இரவு வேளைகளில் கடுக்காய் கசாயமும் அருந்தி முதுமையிலும் இளமையாக வாழ்ந்து வந்தனர்.
குழந்தைப் பேறு
திருமணமாகி ஒரு வருடம் இல்வாழ்க்கையில் ஈடுபட்ட பிறகும் குழந்தைப் பேறு இல்லை என்றால், அதை மகப்பேறுயின்மை என்பார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்கள் சாதாரணமாக இல்வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும். சில நேரங்களில் ஒரு குழந்தை பிறக்கும், அடுத்த குழந்தை பிறப்பதில் சிரமம் இருக்கும். இந்த நேரத்தில் உடல் ரீதியான, மன ரீதியான காரணங்களால் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும். பெண் என்று எடுத்துக்கொண்டால் கர்ப்பாசயத்தை வந்து சேர்ந்தடைந்த ஆர்த்தவ பீஜம் நீடித்து வாழாமல் போவது, இந்த பீஜமானது கர்ப்பாசயத்தில் சரியாகப் படியாது, சினை முட்டை கர்ப்பப் பையை வந்து அடையாதது போன்ற காரணங்களும், மேலும் antiphospholipid syndrome, கட்டிகள், ரத்தம் உறையும் நோய்கள், சர்க்கரை நோய், ஊட்டச்சத்து இன்மை, கர்ப்பப் பைக் கட்டிகள், அதிக உடல் எடை, முக்கியமாக PCOD என்ற நோய், சினைமுட்டையில் நீர்க்கட்டு, பெண்ணுறுப்பு அழற்சி என்ற Pelvic inflammatory disease, endometriosis என்று சொல்லக்கூடிய யோனியின் திசு பிற பகுதிகளுக்குப் பரவுதல், தைராய்டு நோய் போன்றவை காரணமாகின்றன.
பெண்களுக்கு progesterone, FSH பார்க்க வேண்டும். தினமும் காலையில் உடல் சூட்டை நிர்ணயிக்க வேண்டும். Anti mullerian hormone போன்றவற்றைச் செய்ய வேண்டும். கர்ப்பப் பைக் குழாய் (fallopian tube) அடைப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
சிகிச்சை முறைகளில் பொதுவாகப் பெண்களுக்குச் சினை முட்டை உருவாகாமல் போனால் அங்கே சினை முட்டையை உருவாக்குவதற்கு சதகுப்பை, எள், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி போன்றவற்றைக் கொடுப்போம். சிறுதேக்கு, திருதாளி, குமாரியாஸவம், ஜீரகாரிஷ்டம், சீரகக் குழம்பு, குறிஞ்சிக் குழம்பு போன்றவை சிறந்த மருந்துகளாகும். மலை வேம்பாதி எண்ணெயால் குடலைச் சுத்தி செய்ய வேண்டும். Endometrial thickness அதாவது கர்ப்பப் பையின் கனம் 5 மி.மீக்குக் குறைவாக இருந்தால் அதுவும் பிரச்சினை. IVF போன்றவை செய்ய இயலாது. அந்த இடத்தில் க்ஷேத்ர துஷ்டி என்று எடுத்து ஆலமொட்டு பால் கஷாயம், பலசர்ப்பீஸ், தாதுகல்ப லேகியம், பூர்ண சந்திரோதயம் போன்றவற்றைக் கொடுப்போம். மூக்கில் நஸ்யம் - மூலிகை சிகிச்சை இடுவோம். பலா அஸ்வகந்தாலாக்ஷாதி தைலம் வைத்து அப்யங்க ஸ்நானம் செய்யச் சொல்லுவோம்.
பெண்களுக்கு...
l மிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்கலாம்.
l ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை வீக்கம் குணமாகும்.
l ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
l கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப் பை தொந்தரவுகள் நீங்கும்.
l வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும்.
l அரச மரத்து இலையைப் பசும் பாலில் அரைத்துச் சாப்பிட அல்லது அத்தி விதையைப் பசும் பாலில் அரைத்துச் சாப்பிட endometrial thickness அதிகரிக்கிறது
l உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம்.
l இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது.
l சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சூர்ணம் (amenorrhoea) மாதவிடாய் வராத தன்மையில் பலன் அளிக்கிறது.
l அதிக ரத்தப்போக்கு உள்ள நிலைகளில் சதாவரி லேகியம் கொடுக்கலாம்.
ஆண்களின் குறைபாடு என்று எடுத்துக்கொண்டால் விந்துக்களின் எண்ணிக்கை குறைதல். இது 20 million sperm per milliliter இருக்க வேண்டும். ஆனால் 80, 90 என்றெல்லாம் பார்த்திருக்கிறோம். இப்போது அது மேலும் குறைந்துகொண்டே இருக்கிறது. விந்து வெளியேறாமல் இருத்தல், விந்தின் உருவ அமைப்பில் மாறுபாடு இருத்தல், பிறவிக் குறைபாடுகள், புற்றுநோய்க்கு எடுக்கும் மருந்துகள், அதிகமான உஷ்ண நிலையில் வாழ்தல், மதுபானம் அருந்துதல், ஆண்மைக் குறைபாடு, சில ஆங்கில மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுதல், அதிக உடல் எடையுடன் இருத்தல், விந்து வெளியேறும் நேரத்தில் வெளியேறாமல் மேல்நோக்கி நகருதல், வயது இவையெல்லாம் காரணங்கள். 30 வயதுக்குக் கீழுள்ள தம்பதிகள் தினமும் இல்வாழ்க்கையில் ஈடுபட்டால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. 20 வயதில் கர்ப்பம் அடையும் வாய்ப்பு அதிகம். 35 வயதுக்கு மேல் குழந்தை பிறக்கும் வாய்ப்புக் குறைவு. அதனால்தான் ஆயுர்வேதத்தில் இளவயதில் திருமணம் நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசோதனை என்று எடுத்துக்கொண்டால் ஆண்களுக்கு ஐந்து நாட்கள் உடலுறவு கொள்ளாமல் இருந்துவிட்டு விந்துப் பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆண்களுக்குக் குறைபாடு என்று வந்தால் விந்துகளின் அணுக்களைக் கூட்டுவதற்கு அஸ்வகந்தா, பூனைக் காலி, பால்முதப்பன், ஜாதிக்காய், முருங்கை வித்து, பாதாம் பருப்பு, பிஸ்தா, சிறுநாகப்பூ போன்றவை பயன்படுகின்றன. விந்துகளின் முன்னோக்கிச் செல்லும் தன்மையை அதிகரிக்க சேராங்கொட்டையின் மேல் தோடு, வெற்றிலைச் சாறு, பூர்ண சந்திரோதயம், கஸ்தூரி, கோரோசனை போன்றவை பயன்படுகின்றன. உருவ அமைப்பைச் சரியாக்க யாபன வஸ்தி எனப்படும் ஆசனவாய் வழியாகச் செலுத்தக்கூடிய பாலால் காய்ச்சப்பட்ட ஆமணக்கு வேர் கஷாயம் பயன்படுகிறது. இது அல்லாமல் கைமருந்தாகப் பல மருந்துகள் உள்ளன அவற்றை நாம் பார்ப்போம்.
ஆண்களுக்கு...
l வெற்றிலை போடும்போது கூடவே துளசி விதையைப் பொடி செய்து சேர்த்துச் சாப்பிட்டால் தாது கட்டும்.
l நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இவை மூன்றையும் நசுக்கிப் போட்டு கஷாயம் செய்து குடித்தாலும், அமுக்கரா கிழங்குப் பொடி அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து கொடுத்தாலும் தாது பலப்படும்.
l வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளைப் பசும்பாலில் அரைத்து 2 கிராம் வீதம் 48 நாட்கள் சாப்பிட்டாலும் தாது வந்து சேரும்
l ஓரிதழ் தாமரை, ஜாதிக்காய், துளசி, ஆலம் கொழுந்து, முள் இலவம் பிசின், அம்மான் பச்சரிசி, கொத்தமல்லி இந்தச் சேர்க்கையானது asthenospermia என்று சொல்லக்கூடிய விந்து முன்னோக்கிச் செல்லக்கூடிய குறைபாட்டைப் போக்கும்.
l முருங்கைப் பிசினைப் பாலில் காய்ச்சி கற்கண்டு சேர்த்து அல்லது சின்ன வெங்காயம் ஆகியவற்றை நெய்யில் வதக்கிக் கொடுத்து வர ஆண்மை பலம் அதிகரிக்கும்.
l பூசணி விதை, வெள்ளரி விதை, சாரைப் பருப்பு, நீர்முள்ளி விதை, அக்ரோட் பருப்பு, பருத்திக் கொட்டை, மதனகாமப்பூ, பிஸ்தா பருப்பு, பூனைகாலி விதை, மகிழம் விதை, கல் தாமரை விதை இவற்றை விந்து குறைப்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.
l பிருங்கராஜ ஆஸவம் விந்து துஷ்டிகளுக்குப் பலனைத் தருகிறது.
l விந்துவில் பழுப்பணுக்கள் இருந்தால் வெட்டிவேர், சந்தனம், சிறுநாகப்பூ, மருதம்பட்டை கஷாயம் வைத்துக் கொடுக்க பலன் கிடைக்கும்.
நன்றி:தி இந்து December 13, 2014
நொச்சி -பிணிகளை நீக்கும் அருமருந்து
பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில், தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன.
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்:-
காய்கறி வகைகளில் ஒன்றான பூசணியை தொடர்ந்து சமைத்துச் சாப்பிட்டால், நரம்பு தொடர்பான நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண், மேகவெட்டை, பிரமேக நோய் போன்றவை உள்ளவர்களுக்கு அவற்றின் தீவிரம் குறையும்.
கருப்பட்டியின் பயன்கள்:
- சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.
- ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.
Friday, December 12, 2014
ஒரு மாதத்தில் ஈரலை சுத்தப்படுத்தி இளமையாக இருக்க
ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். இந்த ஒருவாய் எலுமிச்சை, ஆலிவ் எண்ணெய் கலந்த பானம், ஈரல் இரத்தத்தை சுத்தப்படுத்துவது அல்லாமல் நமது ஜீரணத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இரத்ததில் உள்ள அசுத்தங்களையும், நச்சுகளையும் வெளியேற்றி சுத்தப்படுத்துகின்றது.
ஆண்களுக்கு முடி கழிதலை தடுக்க 20 சிறந்த வழிகள்
நம் அழகை மேம்படுத்த பலவற்றை நாம் செய்கின்றோம். அவற்றில் முக்கிய பங்கு வகிப்பது சிகை அலங்காரம். ஆள் பாதி, ஆடை பாதி என்று சொல்வர். அதே போல் ஒருவருடைய அழகை தீர்மானிப்பதில், தலை முடி சமபங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட தலை முடி கொட்டினால் முடி கழிதல் என்பது உலகளாவிய பிரச்சினை ஆகும்.
Wednesday, December 10, 2014
சுக்கு
இது ரத்தக் குழாய்களின் செயலை மேம்படுத்தி, இதய இயக்கத்தை வலுவாக்குவது சுக்கின் பணி. சுக்கில் இருக்கும் காரதன்மை, ஜீரணத்திற்கு பிறகு மீதமிருக்கும் பித்த நீரை சமன்செய்துவிடும். அதனால் வயிற்றுப் புண் ஏற்படுவது தடுக்கப்படும்.
ஏற்கனவே புண் இருந்தாலும் ஆற்றும். மலச்சிக்கல் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளும். எஞ்சிய பித்த நீர் சமன்செய்யப்படாவிட்டால் அது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கொலாஸ்ட்ரால் ஆகிவிடும். மதிய உணவுக்குப் பிறகு 5 கிராம் சுக்கு தூளை சுடு நீரில் கலந்து பருகவேண்டும்.
நோய்களை தீர்க்கும் கீரைகள்.....
காய்கறிகளில் மிகவும் சத்தானவை கீரை வகைகள்:
ஒரு கிலோ முளைக்கீரையில், 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான வைட்டமின் ஏ சத்து உள்ளது.
ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்பு சத்தைப் பெற 113 கிலோ ஆப்பிள்களை சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக்கீரையில் சுமார் 32 கிலோ அன்னாச்சிப்பழத்திற்கு நிகரான சத்து நிறைந்துள்ளது.
முடக்கற்றான்
Cardiospermum halicacabum
முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்
முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்
முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்
கண் பார்வை தெளிவடைய…
பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ் தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம் பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவ ற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல் லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.
விளாம்பழம்
விளாம்பழம் ஆங்கிலத்தில் இதை WOOD APPLE என்று சொல்வார்கள்
இது இந்தியாவிலும் அதை சுற்றிய நாடுகளிலும் அதாவது பங்களாதேஷ் , பாகிஸ்தான், ஸ்ரீலங்காவிலும் தான் அதிகம் பயிராகிறது. இது பழுப்பு நிறத்தில் கிரிகெட் பந்து வடிவில் இருக்கும். இது செப்டெம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை கிடைக்கும்
வாழ வைக்கும் வைட்டமின்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும் என்பது பற்றி பார்ப்போம் :
நாவறட்சி, உடல் வெப்பம் தணிக்கும் அத்திக்காய்
அத்திக்காய் மருத்துவம் :-
அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.
நோய்களை குணப்படுத்தும் வெங்காயம்
* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
* வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
Tuesday, December 9, 2014
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரிச்சை பழம் :-
பித்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் மிக்கது பேரிச்சை. தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். அன்றாடம் பேரிச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.
ஏலக்காய்
ஏலக்காயின் மருத்துவ குணங்கள் :-
ஏலக்காய் ஒரு அகட்டு வாய்வு அகற்றி ஆகும். வாந்தியை மற்றும் குமட்டலைப் போக்கக் கூடியது. பசியைத் தூண்ட கூடியது. அல்லது அதிகரிக்கச் செய்வது. பிடிப்பைப் போக்கக் கூடியது. அல்லது கடுப்பைக் கண்டிக்கக் கூடியது. நுண்கிருமிகளைஅழிக்க வல்லது. மூச்சிரைப்பைத் தணிக்க கூடியது.
வாய்ப்புண்ணுக்காக
தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.
வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.
இயற்கை மருத்துவம்
* முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க உடல்வலி நீங்கும்.
* இலந்தைபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர மார்பு வலி குணமாகும்.
உடலின் உஷ்ணம் குறைய
* இளநீர் குடிக்க வேண்டும்.
* கார, மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
Monday, December 8, 2014
உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?
அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.
'ரூல் 32 ' என அறியபடும் உண்ணும் முறை
நண்பர் ஒருவர், 'ரூல் 32 ' என அறியபடும் உண்ணும் முறையை சில மாதங்களுக்கு முன்னால் அறிமுக படுத்தினார்.
Sunday, December 7, 2014
அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..! ( Akasa Garudan Kilangu )
கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை,என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது.
வள்ளலாரின் நீர் சிகிச்சை :
அன்றாடம் நாம் பயன்படுத்தும் குடிநீரில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது என்று அறிந்திருக்கிறோமோ இல்லையே, சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார் நன்கு உணர்ந்து இருந்தார். அதைத் தம் பாடல் வரிகளிலும் குறிப்பிட்டுள்ளார். தண்ணீரைக் குடிப்பதற்கு பயன்படுத்தும் முன் அதைக் காய்ச்சித்தான் குடிக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அதுவும் எப்படித் தெரியுமா?
தெரிந்துகொள்வோம்-மனித உடல்
கல்லீரல்: ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது.
மூளை: உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ
மூளை: உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ
இயற்கை மருத்துவம்,,,,!
மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். –
Saturday, December 6, 2014
கூந்தல் உதிர்வை தடுக்கும் செம்பருத்தி பூ
ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும். செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறியபின் கூந்தலை சீயக்காய் போட்டு அலசவும்.
கேழ்வரகு
அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில், சர்வதேச அளவில் இன்றைக்கு கேழ்வரகுதான். அப்படி என்ன கேழ்வரகுக்குச் சிறப்பு?
குடல் புழுக்களை விரட்டும் யானை திப்பிலி:-
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.
கல்லீரல் நோய்கள் குணமாக
பொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.
பருப்புக் கீரை, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
உண்ணும் உணவு ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும்???
நீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
Friday, December 5, 2014
சத்து நிறைந்த தண்டங்கீரை சூப்
தண்டங்கீரையை கடையில் வாங்கிய அன்றே சமைப்பது நல்லது. கீரையை நல்ல தண்ணீரில்தான் கழுவ வேண்டும். ஒருபோதும் வெந்நீரில் கழுவக்கூடாது. சூடான வெந்நீரில் கழுவினால், அதன் சத்துகள் கிடைக்காமல் போய்விடும். கீரைத்தண்டு சூப் தயாரிக்க தேவையான பொருட்கள் வருமாறு:-
Thursday, December 4, 2014
கூமுட்டையை கண்டுபிடுக்கும் முறை
கூமுட்டை என்பது கரு இல்லாத அதாவது குஞ்சு பொரிக்க முடியாத முட்டையாகும். இதை அடை வைத்த 5வது நாளில் கண்டுபிடித்து உணவுக்கு பயன்படுத்தலாம். இதனால் 21 நாள் காத்திருந்து பின் நாற்றமடிக்கும் போது தூக்கி எறிய வேண்டிய அவசியம் இருக்காது.
மருதாணி
மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது மருதாணி. நகசுத்தி வராமல் தடுக்கும், புண்களை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகுபடுத்தலாம்..
சர்க்கரை நோயாளிகள்- என்ன சாப்பிடலாம்?
இன்று உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த மக்கள் தொகையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இவ்வாறு இந்திய மக்களை குறிப்பாக தென்னிந்திய மக்களை அவதியுறவைக்கும் நோய்களில் சர்க்கரை நோயும், இரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது. இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக இந்திய மக்களை ஆட்டிப் படைக்கின்றன.
காலிஃப்ளவர்
காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிஃப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம். முட்டைக்கோஸும், காலிப்ளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை.
சிறுநீரகக் கற்களைக் கரைக்க
சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிட்டால் அது கடுமையான அவதியைக் கொடுத்துவிடும் என்பது, அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் சில சித்தவைத்திய முறைகள்...
வீட்டில் கொசு தொல்லையா....??
உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த இயற்கை வழி. ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும்.
Wednesday, December 3, 2014
சமையல் குறிப்புகள்
பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
இனிப்பான மருந்து அன்னாச்சி பழம்!!
இயற்கையாக கிடைக்கும் அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. அன்னாச்சி பழம் எளிதில் கிடைக்கக் கூடிய ஓர் பழம்தான் பெரும்பாலான மக்கள் அன்னாச்சி பழத்தினை விரும்புவதில்லை. ஆனால் அன்னாச்சி பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் யாருக்கும் தெரிவதில்லை.
கொடம்புளி வைத்தியம்
சிசேரியன் அறுவை சிகிச்சை ஆனவர்களுக்கும், அதிக இரத்தப் போக்கு இருப்பவர்களுக்கும், கருப்பையுள் காயங்கள் அல்லது இரத்தக்கட்டு இருப்பவர்களுக்கு
செம்பருத்திப்பூவின் மருத்துவ குணம்
செம்பருத்திப்பூவின் மருத்துவ குணம் மகத்தானது. இதன் உண்மையான பெயர் செம்பரத்தை. ஆனால், செம்பருத்தி என்பதே நிலைத்துவிட்டது. இதில் ஒற்றை செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி, மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை செம்பருத்தி என்று இதில் பல வகைகள் உண்டு. ஆனால், ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்திப்பூ மட்டுமே மருத்துவக் குணத்துக்குரியது.
செம்பருத்திப்பூ சாப்பிட்டால், தங்க பஸ்பம் சாப்பிட்ட பலன்!
செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 6.5 கிராம் செம்பருத்திப்பூ சாப்பிட்டால், ஒரு குண்டுமணி அளவு தங்கம் சாப்பிட்ட பலன் கிடைக்கும். செம்பருத்திப்பூவின் மிக முக்கிய மற்றும் சிறப்பான அம்சம், இருதய நோய்க்கு இது அருமையான மருந்து. காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்திப்பூவின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் இருதய நோய் குணமாகும். இருதய நோயாளிகளுக்கு வரக்கூடிய இருதயப் படபடப்பு, வலி, அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளையும் இந்த செம்பருத்திப்பூ சரி செய்ய வல்லது.
இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் செம்பருத்திப்பூவை மருந்தாக உட்கொள்ளும்போது, ஆறு பூக்களின் இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சவும். அந்தச் சாறில் 6 டீஸ்பூன் அளவு தினமும் காலை, மாலை என தொடர்ந்து 24 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கை மேல் பலன் கிடைக்கும்.
செம்பருத்திப்பூ சர்பத்!
செம்பருத்திப்பூவை சர்பத்தாக செய்தும் சாப்பிடலாம். சர்பத் என்றதும், பெரிய செய்முறையோ என்று யோசிக்க வேண்டாம். செம்பருத்திப்பூ இதழ்களை மையாக அரைத்து, அதோடு சீனி (சர்க்கரை), தண்ணீர் சேர்த்தால், சர்பத் தயார். தினமும் சர்பத் செய்ய நேரம் இல்லாதவர்கள், மொத்தமாக 40, 45 பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து சுத்தமான பாத்திரத்தில் போட்டு தண்ணி ஊற்றி கொதிக்க வைக்கவும். பாதியாக வற்றியதும், அடுப்பில் இருந்து இறக்கி கையால் பிசைந்து கூழாக்கி வடிகட்டி, சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் 300 கிராம் சீனி (சர்க்கரை) சேர்த்துக் கலக்கி, பாகு பதம் வரும்வரை காய்ச்சி இறக்கவும். சூடு ஆறியதும், ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும்போது 2 டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.
செம்பருத்திப்பூ சர்பத், இருதய நோய்க்கான மருந்து மட்டுமல்ல. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கணைச்சூடு, அதாவது ஆளை உருக்கும் உள்சூடு தணியும். தாகம் தணிவதுடன் களைப்பு நீங்கும். கண்களுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன், உடல் சூடு சமநிலைக்கு வரும்.
குழந்தைகளுக்கும் மருந்து!
குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம் பிரச்னைகளுக்கு, செம்பருத்தித்திப்பூ கஷாயம் நல்ல மருந்து. சில குழந்தைகளுக்கு கல்லீரலில் வீக்கம் வந்து அது காய்ச்சலாக வெளிப்படும். அந்தப் பிரச்னைக்கு, ஐந்து செம்பருத்திப்பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் வடிகட்டி நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை குடித்து வந்தால், பலன் கிடைக்கும்.
செம்பருத்திப்பூ சாப்பிட்டால், தங்க பஸ்பம் சாப்பிட்ட பலன்!
செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 6.5 கிராம் செம்பருத்திப்பூ சாப்பிட்டால், ஒரு குண்டுமணி அளவு தங்கம் சாப்பிட்ட பலன் கிடைக்கும். செம்பருத்திப்பூவின் மிக முக்கிய மற்றும் சிறப்பான அம்சம், இருதய நோய்க்கு இது அருமையான மருந்து. காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்திப்பூவின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் இருதய நோய் குணமாகும். இருதய நோயாளிகளுக்கு வரக்கூடிய இருதயப் படபடப்பு, வலி, அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளையும் இந்த செம்பருத்திப்பூ சரி செய்ய வல்லது.
இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் செம்பருத்திப்பூவை மருந்தாக உட்கொள்ளும்போது, ஆறு பூக்களின் இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சவும். அந்தச் சாறில் 6 டீஸ்பூன் அளவு தினமும் காலை, மாலை என தொடர்ந்து 24 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கை மேல் பலன் கிடைக்கும்.
செம்பருத்திப்பூ சர்பத்!
செம்பருத்திப்பூவை சர்பத்தாக செய்தும் சாப்பிடலாம். சர்பத் என்றதும், பெரிய செய்முறையோ என்று யோசிக்க வேண்டாம். செம்பருத்திப்பூ இதழ்களை மையாக அரைத்து, அதோடு சீனி (சர்க்கரை), தண்ணீர் சேர்த்தால், சர்பத் தயார். தினமும் சர்பத் செய்ய நேரம் இல்லாதவர்கள், மொத்தமாக 40, 45 பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து சுத்தமான பாத்திரத்தில் போட்டு தண்ணி ஊற்றி கொதிக்க வைக்கவும். பாதியாக வற்றியதும், அடுப்பில் இருந்து இறக்கி கையால் பிசைந்து கூழாக்கி வடிகட்டி, சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் 300 கிராம் சீனி (சர்க்கரை) சேர்த்துக் கலக்கி, பாகு பதம் வரும்வரை காய்ச்சி இறக்கவும். சூடு ஆறியதும், ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும்போது 2 டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.
செம்பருத்திப்பூ சர்பத், இருதய நோய்க்கான மருந்து மட்டுமல்ல. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கணைச்சூடு, அதாவது ஆளை உருக்கும் உள்சூடு தணியும். தாகம் தணிவதுடன் களைப்பு நீங்கும். கண்களுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன், உடல் சூடு சமநிலைக்கு வரும்.
குழந்தைகளுக்கும் மருந்து!
குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம் பிரச்னைகளுக்கு, செம்பருத்தித்திப்பூ கஷாயம் நல்ல மருந்து. சில குழந்தைகளுக்கு கல்லீரலில் வீக்கம் வந்து அது காய்ச்சலாக வெளிப்படும். அந்தப் பிரச்னைக்கு, ஐந்து செம்பருத்திப்பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் வடிகட்டி நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை குடித்து வந்தால், பலன் கிடைக்கும்.

பால்வினைநோயான வெட்டை நோயால் அவதிப்படுகிறவர்கள் மூன்று செம்பருத்திப்பூவின் இதழ்களை தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் மென்று தின்று, கொஞ்சம் பசும்பால் குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 40, 48 நாட்கள் சாப்பிட்டு வர, நிச்சய பலன் கிடைக்கும்.
அழகுப் பொருளாகும் பூ!
செம்பருத்திப்பூக்களை தலைக்குத் தேய்க்கும் சீகைக்காய் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், பொடுகு, முடி உதிர்தல், இளநரை பிரச்னைகள் சரியாகும். காய வைத்த செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, பயத்தம்பருப்பு, கறிவேப்பிலை அனைத்தையும் நன்றாகக் காய வைத்துப் பொடியாக்கி, சோப்புக்குப் பதிலாக இதை தலை முதல் கால் வரை பூசி குளித்து வர, சரும நோய்களில் இருந்து விடபடலாம்!
எண்ணிடலங்காதவைதானே செம்பருத்திப்பூவின் பலன்கள்!
- எம். மரிய பெல்சின்
அழகுப் பொருளாகும் பூ!
செம்பருத்திப்பூக்களை தலைக்குத் தேய்க்கும் சீகைக்காய் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், பொடுகு, முடி உதிர்தல், இளநரை பிரச்னைகள் சரியாகும். காய வைத்த செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, பயத்தம்பருப்பு, கறிவேப்பிலை அனைத்தையும் நன்றாகக் காய வைத்துப் பொடியாக்கி, சோப்புக்குப் பதிலாக இதை தலை முதல் கால் வரை பூசி குளித்து வர, சரும நோய்களில் இருந்து விடபடலாம்!
எண்ணிடலங்காதவைதானே செம்பருத்திப்பூவின் பலன்கள்!
- எம். மரிய பெல்சின்
Tuesday, December 2, 2014
முடியைப்பற்றி சில தகவல்கள்
• ஒரு சராசரி மனிதரின் தலையில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் முடிகள் வரை இருக்கும்.
• தலைமுடி ஒரு மாதத்திற்கு 11/4 செ.மீ. நீளம் வரை வளரும்.
• மொத்தமாக மனிதனின் உடல் முழுவதும் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளன.
• ஒரு நாளில் 50-150 முடிகள் உதிர்கின்றன.
• மொத்தமாக மனிதனின் உடல் முழுவதும் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளன.
• ஒரு நாளில் 50-150 முடிகள் உதிர்கின்றன.
உடல் எடை குறைய
சிறுநாகன் பூ - 5 கிராம் ஏலம் - 10 கிராம் கிராம்பு - 20 கிராம் திப்பிலி - 40 கிராம்
மிளகு - 80 கிராம் சுக்கு - 150 கிராம் அஸ்வகந்தா(அமுக்கரா) - 320 கிராம்
சருமத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியை தடுக்கும் பவுடர்
பெண்களுக்கு முகம் மற்றும் இதர பாகங்களில் அதிக அளவு முடி வளர்வதற்குக் காரணமே, ஹார்மோன் மாற்றங்களும் பழக்க வழக்கங்களும் தான். த்ரெடிங், வாக்ஸிங் போன்றவற்றைச் செய்யும் போது முடி வளராமல் தடுக்கவும் சில சிகிச்சைகள் இருக்கின்றன.
நரம்பு பிடிப்பு குறைய
தவிர்க்க வேண்டியவை :
குடலில் வாயு- மலத்தேக்கலை ஏற்படுத்தும் நெய்,எண்ணெய்ப் பசையில்லாத வறட்சியான பண்டங்களைச் சாப்பிடுதல், பச்சைக் கறிகாய்களைத் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனி வறட்டுச் சாதமாகவே சாப்பிடுதல், பால், பழம், தண்ணீர் சேர்த்துக் கொள்ளாதது, பக்குவம் சரியான முறையில் ஆகாத உணவு வகைகள், உலர்ந்து போன காய்கள், குடலில் நீர்ப்பசையை சுண்ட வைக்கும் மிளகாய், மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை அதிகம் சேர்ப்பது, கொத்துக் கடலை, மொச்சை, சோளமுத்து, மரவள்ளிக் கிழங்கு, ஜவ்வரிசி இவற்றினுடைய மாவுகளை அப்படியே கூழாக்கிச் சாப்பிடுதல், தீட்டிய அரிசி, வாழைப்பூ, அத்திப் பிஞ்சு, சுண்டை வத்தல் இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுதல், மதுபானம், அதிகப்பட்டினி, மிதமிஞ்சி சாப்பிடுதல் போன்றவை உங்களுடைய உபாதையை மேலும் பெரிதாக்கிவிடக் கூடும்.
சிசேரியன் தழும்பை இயற்கையா மறைய வைக்கணுமா?
கர்ப்பமாக இருந்தபோது பெரிதான வயிறு பிரசவத்திற்குப் பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் சில சமயங்களில் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். வீட்டில் இருக்கக் கூடிய இயற்கையான பொருட்களை வைத்து பிரசவ தழும்புகளை மறையச் செய்யலாம்.
குழந்தையின்மை
ஆக்ரூட் பருப்பு, சாலமிரிசி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் வேக வைத்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
ஆடு தீண்டா பாலையை மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள பூச்சிகள் ஒழிந்து குழந்தை பேறு உண்டாகும்.
இரவு உணவுக்கு பின் செய்யக் கூடாதவை….!!
பொதுவாக நம்மில் பலர் இரவு உணவை முடித்து விட்டு உடனே செறிப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நடப்பது, டிரைவிங் செல்வது என்று ஏதாவது செய்வோம். உண்மையில், உணவிற்கு பின் நாம் ஓய்வெடுப்பது தான் சரி.
பேரீச்சம்பழம்
பேரிச்சம்பழம், என்னதான் நம்ம நாட்டிலயும் விளைஞ்சா கூட, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சம்பழம் என்றால் உடனே எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் தயாராக இருப்பனர் நம் மக்கள்.
ஆனால் அதன் மருத்துவ குணங்கள் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? பெரியவர்களிடம் கேட்டால் பேரீச்சம்பழம் உடம்புக்கு நல்லது ஒழுங்கா சாப்பிடு என்று கூறுவார்கள். ஆனால் என்ன விஷயம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?? வாருங்கள்…
இயற்கை மருத்துவம்,
- உடல் பருமன் குறைக்க - எடை குறைய.
- உடல் மெலிவு பெற:- பப்பாளியைச் சமைத்து உண்ணலாம்.
- ஊளைச்சதையை குறைக்க:- அடிக்கடி சோம்பு நீர் பருகலாம்.
சிறுநீரகக் கல் கரைய...!
இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும்.
Monday, December 1, 2014
வாழைப்பழம்
பல நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மையுடையது. வாழைப்பழம் போதுமான சக்தியினை அளிக்கின்றது. இதில் அதிக நார்ச்த்து மற்றும் சுக்ரோஸ், ப்ரக்டோஸ், குளுக்கோஸ் போன்று இயற்கை சர்க்கரைப்பொருட்கள் உள்ளது. வாழைப்பழம் சில உடல்நலக்கோடுகள் ஏற்படுவதை தடுக்கிறது அல்லது அவற்றை மேற்கொள்ள உதவுகிறது.
காய்கறிகளும் அதன் பயன்களும்!!!
1) வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.
வைட்டமின்–டி!
வைட்டமின் டி என்பது உணவில் காணப்படும் ஒரு ஊட்டச்சத்து மட்டுமன்று, அது நம் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோனும் கூட. உலகளவில் சுமார் 1 பில்லியன் மக்கள், அவர்களின் இரத்தத்தில் மிகக் குறைந்த அளவில் வைட்டமின் டி-யைக் கொண்டிருப்பதாகவும், இந்த குறைபாடு அனைத்து வயதினரிடையேயும், அனைத்து இனத்தினரிடமும் பரவலாகக் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மணத்தக்காளி கீரையின் மருத்து குணங்கள்
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன.
இஞ்சி
இஞ்சியை நாம் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம், கிராமப்புரங்களில் ஒரு சில வியாதிகளுக்கும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நகரத்தில் வாழும் மககள் இதன் அருமை புரியாமல் கண்ட சிகிச்சையை எடுத்துக்கொண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர். எனவே இஞ்சியின் பயன்களை புரிந்துக்கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவற்றை குணப்படுத்தலாம்.
Subscribe to:
Posts (Atom)