Monday, January 30, 2017

இயற்கை மருத்துவம்

1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

Sunday, January 29, 2017

மூக்கில் இருக்கும் அசிங்கமான வெண்புள்ளிகளைப் போக்க வேண்டுமா?

Best Tips & Home Remedies For Whiteheadsகரும்புள்ளிகளைப் போன்றே வெண்புள்ளிகளும், மூக்கு, கன்னம் மற்றும் தாடைப் போன்ற பகுதிகளில் வரும். இப்பிரச்சனையால் எண்ணெய் பசை சருமத்தினர் தான் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். மேலும் இந்த வெண்புள்ளி பிரச்சனையானது ஹார்மோன்கள் மற்றும் மரபணுக்களாலும் வரும். 

அடிக்கடி கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறதா?

சிலருக்கு அடிக்கடி கண்கள் சிவந்து, எரிச்சலுடனும், அரிப்போடும் இருக்கும். இப்படி கண்களில் பிரச்சனைகளை சந்திப்பதற்கு தூக்கமின்மை, கம்ப்யூட்டர் அல்லது மொபைலை நீண்ட நேரம் பார்ப்பது, உடல் வெப்பம் அதிகமாக இருப்பது மற்றும் தூசி போன்றவைகள் தான் காரணம். 
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கடைகளில் விற்கப்படும் கண்ட மருந்தை கண்களில் விடுவதற்கு பதிலாக, வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றினால், கண் பிரச்சனைகள் நீங்குவதோடு, கண்களின் ஆரோக்கியமும் மேம்படும். சரி, இப்போது கண் எரிச்சல் மற்றும் அரிப்பைப் போக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காண்போம்.

Friday, January 27, 2017

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

Tuesday, January 24, 2017

வழுக்கை தலையில் முடியை வளர

ஆண்களுக்கு இருக்கும் பெரும் அழகுப் பிரச்சனை தான் வழுக்கைத் தலை. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம். ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இருந்தால், ஒருசில சிகிச்சைகளின் மூலம் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யலாம்.

Thursday, January 19, 2017

2 நிமிடத்தில் சளியை நீக்கி, மூக்கடைப்பை சரி செய்ய,

சளி தொல்லை என்றால் நம்மில் பலர் உடனே ஒரு சிலர் இரசயான கலப்பு கொண்டு தயாரிக்கப்பட்ட வெபர் ரப் (Vapor Rub), இன்ஹேலர் போன்றவற்றை கையில் எடுத்துக் கொள்வோம். ஓரிரு நாட்களுக்கு இவற்றை மூக்கிலும் நெஞ்சிலும் தேய்த்து எரிச்சல் கூடிய நிலையில் உலாவி கொண்டிருப்போம்.
ஆனால், இவற்றுக்கு பதிலாக காலம், காலமாக நாம் சளி, மூக்கடைப்புக்கு தீர்வு காண பயனளிக்கும் யூக்கலிப்டஸ் , தேங்காய் எண்ணெய், தேன் போன்ற பொருட்களை கொண்டு இயற்கை வெபர் ரப் (Vapor Rub) தயாரித்து பயன் பெறுவது எப்படி என இங்கு காணலாம்...

Sunday, January 15, 2017

முடி உதிர்வுக்கு குட்பை... அசத்தல் நெல்லிக்காய்!

நெல்லிக்காய்
நெல்லிக்காய் என்றதும் நம் நினைவுக்குவருவது அதன் சுவையும், கண்ணைக் கவரும் பச்சை நிறமும்தான். ஆனால் சுவையையும் தாண்டி அதில் இருக்கும் சத்துகள் அநேகம். அதனால்தான் ஔவை முதல் சித்தர்கள் வரை அதைக் கொண்டாடினார்கள். நெல்லிக்காயின் மருத்துவப் பயன்களை விளக்குகிறார் சித்த மருத்துவர் சோ.வித்யா. 

Monday, January 9, 2017

சிறுநீரக கற்களை வேகமாக கரைக்கும் ஜூஸ்

ஒருவருக்கு சிறுநீரக ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. சிறுநீரகத்தில் சிறு பிரச்சனை என்றாலும், உடலில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதிலும் சிறுநீர கற்கள் வந்தால், அதனால் தாங்க முடியாத அளவில் கடுமையான வலியை உணரக்கூடும்.
சிறுநீரக கற்கள் வருவதற்கு அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து தேங்குவது தான் காரணம். சிறுநீரக கற்களைக் கரைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அதில் அதிகளவு நீரைப் பருகுவது, பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Saturday, January 7, 2017

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

 
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.
உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.
நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

Wednesday, January 4, 2017

பற்களின் மஞ்சள் நிறத்தை போக்க

பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, நாளடையவில் ஈறுகளையும் பாதிக்க ஆரம்பித்துவிடும். 
மிக எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே பற்களின் மஞ்சள் நிறத்தை போக்க முடியும். 
தேங்காய் எண்ணெயைக் கொண்டே மஞ்சள் கறையைப் போக்க முடியும்.

Tuesday, January 3, 2017

மல்லி (தனியா)


இன்றைய கால சூழலில் சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறது. தனியா (மல்லி)) பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது. மல்லி(தனியா)ப்பொடியில் 8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது.
மிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி(தனியா) பயன்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். உங்கள் உணவுகளில் மல்லி(தனியா) போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்தால் இவ்வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

சளி, இருமலில் இருந்து விடுபட

தற்போதுள்ள மார்கழி பனியால் ஏராளமானோர் இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள்.

அதிலும் நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களைப் பின்பற்றினால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். இங்கு சளி, இருமலுக்கான சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, சளி, இருமலில் இருந்து விடுபடுங்கள்.

Monday, January 2, 2017

நல்லெண்ணெய்யின் நற்குணம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“ வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்” என்பது பழமொழி. இதே போல மற்றொரு அனுபவ உண்மை என்னவெனில், வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும். நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துகிறது. சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக் கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக்காக்கும்.