Wednesday, December 10, 2014

கண் பார்வை தெளிவடைய…

பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ் தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம் பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவ ற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல் லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.
அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற் றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.
பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங் கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெ ல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப் பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவு கள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.
கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.
பாகல் இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகைச் சேர்த்து மைப் போல அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக கண்களை சுற்றிக் கனமாகப் பூசவேண்டும். பின்பு காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு குறையும்.
சத்துக் குறைவால் ஏற்ப்பட்ட கண் நோய்கள் நீங்க…
சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்த மல்லி இலைச் சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தே வையான அளவு சுத்தமா ன பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவு ம். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட்சா று, தேங்காய் துருவியது, பனங்கற்கண் டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில் லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இரு வேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண் டும்)
பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங் காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவை யான அளவு பனங்கற்கண்டு, ஏல க்கா ய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.
புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல் லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம்.
கண்களுக்கு வைட்டமின் `ஏ‘ எந்தெந்த உணவுகளில் அதிகமாக உள்ளது?
முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரை க்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் `ஏ‘ போதிய அளவுள்ளது. மேலும் மாம்பழம் கேரட், பால், வெண்ணெ ய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றி லும் இச்சத்து உள்ளது.

No comments:

Post a Comment