Showing posts with label பொது மருத்துவம். Show all posts
Showing posts with label பொது மருத்துவம். Show all posts

Saturday, December 23, 2017

நீரிழிவுக்கான பரிசோதனைகள்

நீரிழிவை உறுதிப்படுத்துவதற்கான சில பரிசோதனைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
சிறுநீரகப் பரிசோதனை
வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப் பொறுத்து `ப்ளஸ்’ (+) முதல் நான்கு (++++) ப்ளஸ் வரை அளவிடப்படும்.

Thursday, November 23, 2017

குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை எது தெரியுமா?

குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி.
குடும்பத்தலைவர் விடும் குறட்டையால், எத்தனைக் குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன, எத்தனை குடும்பத்தலைவிகள், தாங்கள் படும் இன்னலை வெளியே சொல்லமுடியாமல், இரவுநேரம் வந்தாலே அஞ்சி நடுங்கி வாழ்கின்றனர்.
வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவிகள், தங்கள் கணவர்களின் இந்தக் குறட்டையால் சரியாக தூக்கம் இல்லாமல், காலையில் பணிநேரத்தில் தூங்கிவழிந்து ஆபிஸ் பணிகளில் ஈடுபாடு கட்டமுடியாமல், மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கின்றனர். இவ்வளவு இன்னல்களுக்கு காரணமான குறட்டை ஏன் வருகிறது?

Friday, April 3, 2015

வெயிலுக்கு ஏற்ற பானகம்

தேவையானவை:
வெல்லம் - 200 கிராம், புளி - 50 கிராம், பொடித்த சுக்கு - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை, ஏலக்காய் - 2, புதினா இலைகள் - 5, எலுமிச்சைப்பழம் - 1.

Friday, March 20, 2015

கோடை காலத்தில் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கோடையில் அடிக்கும் வெயிலில் பலருக்கும் அடிக்கடி தாகம் எடுக்கும். ஆகவே பலரும் தங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்திருப்பார்கள். ஆனால் சிலருக்கு தண்ணீர் குடித்து அலுத்துப் போயிருக்கும்.

Friday, December 12, 2014

ஆண்களுக்கு முடி கழிதலை தடுக்க 20 சிறந்த வழிகள்

நம் அழகை மேம்படுத்த பலவற்றை நாம் செய்கின்றோம். அவற்றில் முக்கிய பங்கு வகிப்பது சிகை அலங்காரம். ஆள் பாதி, ஆடை பாதி என்று சொல்வர். அதே போல் ஒருவருடைய அழகை தீர்மானிப்பதில், தலை முடி சமபங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட தலை முடி கொட்டினால் முடி கழிதல் என்பது உலகளாவிய பிரச்சினை ஆகும்.

Monday, December 1, 2014

முதுகு வலியை போக்க என்ன செய்யலாம்???

இன்றைய காலகட்டத்தில் அனைவரையும் அதிகமாக பயமுறுத்தும் ஒரு நோய் முதுகு வலி. யாரைப் பார்த்தாலும் முதுகில் பெல்ட் மாட்டிக் கொண்டு சுற்றுகின்றனர். ஆண்கள் அதிகளவு டூவீலரில் சுற்றுவதால் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர்.

Sunday, November 30, 2014

நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..!

நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..!

•தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.

•தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும்.

•தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும்.

•பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.

•வாய்க்குள் காற்றை நிரப்பி மூடவும். பின்னர் காற்றை வெளியேற்றவும். இதுபோல் 10 முறை செய்யவும்.

•கண்களை வட்டமாக சுற்றிப் பார்க்கவும். இதுபோல் ஒரு 2 நிமிடம் செய்யவும்.

•கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து தரையில் உட்கார்ந்து கழுத்தை கொஞ்சம்-கொஞ்சமாக சாய்க்கவும். அதே போன்று மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்தவும்.

•இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண்டேயிருந்து விடவும்.

•கண்களைச் சுற்றி சுருக்கங்கள் விழுவதால் வெகு சீக்கிரம் வயதாகி விட்டது போன்று தோற்றம் ஏற்படும். கீழ்க்கண்ட பயிற்சியின் மூலம் கருப்பு வளையங்கள் நீங்க வாய்ப்புள்ளது.

•முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே பார்க்கவும். இதே போன்று வலப்புறமும், இடப்புறமும் பார்க்கவும்.

•விரல்களின் அடிப்புறத்தால் முகம் முழுக்க மெதுவாக அழுத்தினால் முகத்தில் உள்ள தளர்ச்சி நீங்கும்.
முடிந்தவரை பகிருங்கள்....பகிருங்கள்....பகிருங்கள்....
•தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.

Wednesday, November 12, 2014

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் பாதிப்பில் சிக்கும் மக்கள் பெருகிக்கொண்டே வருகின்றனர். மருந்துகளைக் கூட முறையாக பயத்தோடு எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், என்ன உணவு உட்கொள்வது என்பதில் குழம்பியே இருக்கின்றனர். 

Wednesday, October 29, 2014

வயிற்றைச் சுத்தமாக்கும் உணவுகள்


  • அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும்.
  • பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.
  • அதேபோல கேரட், வெங்காயம், பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.
  • எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும்.
  • தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
  • சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது

Saturday, October 25, 2014

மருத்துவ குணமிக்க தேங்காய் எண்ணெய்

தேவையான பொருட்கள் 
ஒரு லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய்
நெல்லிக்காய் சாறு 50 மிலி 

Sunday, September 28, 2014

உடல் எடை குறைய

  • இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்
  • ஊற‌வைத்த‌ அவ‌லை காலையிலும், இர‌விலும் சாப்பிட்டு வ‌ர‌ உட‌ல் எடை குறையும்.

Thursday, September 25, 2014

தோல் புற்றுநோயை தடுக்கும் இலவங்கம்(கிராம்பு)

இலவங்கம் கிராம்பு என்றும் அழைக்கப்படுகிறது. கிராம்பு எனப்படும் இலவங்கம் வாந்தியை நிறுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய தன்மையுடையது. 

Tuesday, September 23, 2014

புகைபிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் வாழைப்பழம்

அதிகமாகப் புகை பிடிப்பவர்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் சக்தி வாழைப்பழத்தில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் பி மற்றும் தாது உப்புக்கள் (மினரல்ஸ்) உடலாலும், மனதாலும், பழக்கப்பட்டுப் போன `நிக்கோடின்' என்னும் நச்சுத் தன்மையைக் குறைக்க உதவுகின்றன.