Showing posts with label பழங்கள். Show all posts
Showing posts with label பழங்கள். Show all posts

Wednesday, October 16, 2019

பழங்களின் மருத்துவ குணங்கள்:-

1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்
2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்
3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்
5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி
6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

Wednesday, July 3, 2019

எலுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்.

எலுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்..! தெரியுமா இந்த அற்புதம் உங்களுக்கு?
எலுமிச்சை ஜூஸ் எந்த அளவிற்கு நம் உடலுக்கு ஏற்றது என்பதை கீழ் கொடுக்கப்பட்டு உள்ள டிப்ஸ் பார்த்து தெரிஞ்சிக்கோங்க...
வெளியூர் பயணத்தின்போது.... சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க எலுமிச்சை ஜூஸ் அருந்தி வரலாம். 

Saturday, June 29, 2019

பலாபிஞ்சுவின் மருத்துவகுணங்கள்..












..
படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி
✍புற்றுநோய் வராமல் தடுக்க (குறிப்பாக குடல்புற்று நோய்) பலாபிஞ்சு சிறந்த மருந்தாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள் அது மட்டுமல்ல வயோதிக முதிர்வை தவிர்க்கவும், வெண்புள்ளிகள் போன்ற தோல் வியாதிகளுக்கும் பயன்தருகின்றது.
💥Knee pain /Joint Pain - Arthritis and ulcer - நல்ல தீர்வாகும்.

Friday, September 7, 2018

பேரீச்சம் பழம்

முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக பேரீச்சம் பழம் விளங்குகிறது.🔹
➖
🔻ஆண்கள் தங்களுடைய ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும். தாது புஷ்டி உண்டாகும்.🔹
➖
🔻பெண்கள் மாதவிலக்கு காலங்களில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும். இதை சரிசெய்ய பேரீச்சம் பழம் சாப்பிட வேண்டும். ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் உதவுகிறது.🔹
➖

Wednesday, July 18, 2018

அத்திப்பழம்

அத்திப்பழம்
------------------------

அத்திப் பூத்தாப்போல இருக்கே?’ என்று ஒரு பழமொழி உண்டு. உண்மையில் அபூா்வமாக பூப்பதாக நினைக்க வேண்டாம். அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும். அதனால் இதை “காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்” என்ற விடுகதையிலும் சொல்வர்.

Wednesday, July 4, 2018

நாவல் பழம்

நாவல் பழத்தின் மருத்துவக் குணம்
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். 
நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். 
இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.
மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

Tuesday, August 29, 2017

அல்சரை போக்கும் விளாம்பழம்

 வுட் ஆப்பிள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விளாம்பழத்தில் புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன.
இந்த விளாம்பழம் மற்றும் அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது.
குறிப்பாக விளாம் பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும், பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது. விளாங்காயில் பி2 உயிர்சத்தும் உள்ளது.

Friday, August 18, 2017

விளாம்பழம்

தெய்வத்தை மிஞ்சிய சக்தியும் இல்லை தெய்வகனி விளாம்பழத்திற்க்கு மிஞ்சிய மருந்தும் இல்லை 
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். 
இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. 

Wednesday, August 2, 2017

பழங்களின் பயன்கள்

1.மாதுளை பழம்- வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.
2.நாரத்தம் பழம்- நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.
3.முந்திரிப் பழம்- கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.
4. கண்டங் கத்திரிப்பழம்- கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.
5.தூதுளம் பழம் - தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

Wednesday, July 12, 2017

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழம் 
******************
orange-king-of-fruits உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.
ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. இது மனித உடலில் வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த சத்து வளரக்கூடிய எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Sunday, January 15, 2017

முடி உதிர்வுக்கு குட்பை... அசத்தல் நெல்லிக்காய்!

நெல்லிக்காய்
நெல்லிக்காய் என்றதும் நம் நினைவுக்குவருவது அதன் சுவையும், கண்ணைக் கவரும் பச்சை நிறமும்தான். ஆனால் சுவையையும் தாண்டி அதில் இருக்கும் சத்துகள் அநேகம். அதனால்தான் ஔவை முதல் சித்தர்கள் வரை அதைக் கொண்டாடினார்கள். நெல்லிக்காயின் மருத்துவப் பயன்களை விளக்குகிறார் சித்த மருத்துவர் சோ.வித்யா. 

Friday, December 30, 2016

தினம் 3 உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதனால் 0.2 கிராம் கொழுப்பைத் தான் இதில் இருந்து பெற முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.

Wednesday, December 28, 2016

ஊட்டச்சத்தை கிரகிக்க உதவும் நெல்லி

துவர்ப்புச் சுவை மிகுந்தது பெருநெல்லிக் காய். மற்ற காய்களை விடவும் சிறிதாக இருந்தாலும் இந்தக் காய் சத்து நிறைந்தது. விலை மலிவாகவும் கிடைக்கும் இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
பெருநெல்லிக் காய் தரும் பலன்கள் என்ன?
> பெருநெல்லிக்காயை ஊறுகாயாகவோ, உப்பு வைத்தோ சாப்பிடுவதைக் காட்டிலும், தனியாகச் சாப்பிடுவதே சிறந்தது. தனியாகச் சாப்பிட விரும்பாத பட்சத்தில் சாலட், சட்னி போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம்.
> பெருநெல்லிக்காய் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.
> உணவு செரிமானம் அடையப் பெருநெல்லிக்காய் உதவுகிறது. ஊட்டச்சத்துகளை உட்கிரகிக்கவும், உடல் அவற்றைத் தன்வயமாக்கிக்கொள்ளவும் நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.
> நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள், சிறுநீர் வழியாக வெளியேற உதவுகிறது.
> மாதவிடாய் தசைப்பிடிப்பு, வலிகளைக் குறைப்பதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.
நன்றி : நேயா, தி ஹிந்து, December 24, 2016 11:34 IST

Sunday, December 25, 2016

அத்திப்பழம் பலன்கள் .

அத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6-8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி எனவும், நாட்டு அத்தி எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.

Wednesday, December 21, 2016

மாதுளம் எண்ணெய் தயாரிக்கலாமா!

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு மாதுளம்பழத்தை நான்காக நறுக்கிப் போடவும். பாத்திரத்தில் கைகளை அமிழ்த்தி மாதுளம் முத்துக்களைப் பிரிக்கவும். மாதுளம் தோல்களை வெளியே எடுத்துவிடவும். இப்போது பாத்திரத்தின் அடிப்பகுதியில் நல்ல மாதுளம் முத்துக்கள் இறங்கியிருக்க, பூச்சி அரித்த, சொத்தை மற்றும் அழுகிய மாதுளம் முத்துக்கள் மேலே மிதக்கும். தண்ணீரோடு அவற்றை வடித்துவிடவும். அடிப்பகுதியில் தங்கியிருக்கும் நல்ல மாதுளம் முத்துக்களை ஒரு காட்டன் துணியில் பரப்பி, ஃபேன் காற்றில் உலர்த்தவும். இதனை ஒரு கனமான கண்ணாடி பாட்டிலில் சேமித்துக்கொள்ளவும்.

Saturday, December 17, 2016

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!

* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
* பித்தத்தைப் போக்கும்......!
* உடலுக்குத் தென்பூட்டும்......!
* இதயத்திற்கு நல்லது......!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!
* கல்லீரலுக்கும் ஏற்றது......!

Sunday, August 28, 2016

பளபள சருமத்துக்கு பப்பாளி!

* சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, இயற்கை அழகை அளிக்கிறது பப்பாளி.
* பப்பாளியுடன் சிறிது தேன் கலந்து தடவினால், சருமம் ஈரப்பதத்துடன் பொலிவாக இருக்கும்.
* பப்பாளியைக் கைகளால் நசுக்கி, முகத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவு பெறும்; முகப்பருக்கள் மறையும்.
* சருமத்தில் தொடர்ந்து தடவியும் உட்கொண்டும் வந்தால், சருமம் மென்மையாகும்.

Friday, August 26, 2016

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்

Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.
முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த சூரிய சக்தியை பயன்படுத்தினார். உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;

Tuesday, August 23, 2016

திராட்சை

பழங்களில் நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் தான் திராட்சை. இந்த திராட்சையை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும், இப்பழத்தை ஜூஸ் போட்டுக் குடித்தாலும் இப்பழத்தின் முழு சத்துக்களையும் பெறலாம்.
அதிலும் திராட்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். சரி, இப்போது திராட்சை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

Saturday, September 26, 2015

இதயத்துக்கு சூப்பர் டானிக், பிளம்ஸ்!

மலைப்பகுதிகளில் அதிகமாக விளையும் பழங்களில் ஒன்று பிளம்ஸ். சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்தப் பழம் இனிப்பு, புளிப்புச் சுவையுடன் இருக்கும். பொதுவாக சிவப்பு நிறப் பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடியவை.
அந்த வகையில் ஆப்பிள், செவ்வாழை, மாதுளை, இலந்தை, செர்ரி போன்ற சிவப்பு நிறப் பழங்கள் வரிசையில் இடம் பெறும் இந்த பிளம்ஸ் பழத்தின் பலன்கள் பல பல!