Monday, January 29, 2018

*சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!!*_🥣🥣🥣🥣🥣🥣🥣🥣🥣🥣🥣🥣

1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்
2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்
3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்.

Sunday, January 21, 2018

தேங்காயில் காணப்படும் மருத்துவ குணங்கள்

🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥
தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்.
உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

`எதைத் தின்றால் `பித்தம்’ தெளியும்?

’வாதம், பித்தம், கபம்...........
`எதைத் தின்றால் `பித்தம்’ தெளியும்?’, `ஒருவேளை `வாத’க் குடைசலாய் இருக்குமோ’, `நெஞ்சில் `கபம்’ கட்டியிருக்கு...’ என்கிற உரையாடல்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன.
ஆனால், நம் மூத்த தலைமுறையில் இந்த மூன்றும் மிக முக்கியமானவை. `வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம்’ எனும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள்.

நோய்கள் வராமல் தடுக்கும்.வந்தாலும் விரட்டும் மருந்து கஞ்சி

ஆரோக்கியமாக வாழ்வது அத்தனை பெரிய சவாலான விஷயமெல்லாம் இல்லை என்று எளிமையான வழிகளைப் பின்பற்றியே அசாத்தியமாக வாழ்ந்துகாட்டி விட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர். அதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் மருந்துகஞ்சியும்.
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவுப்பொருட்களை ஒன்று சேர்த்தே, மருந்து கஞ்சியாக வைத்து அருந்தித் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணி வந்துள்ளனர். நோய்கள் அதிகரிக்கும் தற்போதைய சூழலுக்கு இந்த மருந்து கஞ்சி மிகவும் நல்லது’’ என்கிறார் சித்த மருத்துவர் கஸ்தூரி.அதன் மருத்துவ குணங்கள் பற்றியும், மருந்து கஞ்சி எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.

தொண்டை வலி விரட்ட சில டிப்ஸ்

தொண்டை வலி என்பது எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ்வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. சாப்பிடும்போதும் சிரமம் இருக்கும். எனவே இதை விரட்ட சில டிப்ஸ்...
சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகிவிடும். சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது. இதன் அடுத்தக்கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப்புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது.

மஞ்சள் பற்களை வெண்மையாக்க சில டிப்ஸ்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது தெரிந்தாலும் வாயில் ஏற்படும் சில பிரச்சனை நம்மை சிரிக்கவே விடாது. அதில் முக்கியமான காரணங்களில் ஒன்று பற்களில் கறை ஏற்படுவது. உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்,உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் பற்களில் கறை ஏற்படுவதுண்டு, பிறரிடம் பேசுவதற்கே தயக்கத்தை ஏற்படுத்திடும் பற்களின் கறையை போக்க நிறைய செலவு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டிலேயே எளிதாக போக்கலாம்.

Saturday, January 13, 2018

போக்க வேண்டியதும் ! துவங்க வேண்டியதும் !

------------------------------------
போக்க வேண்டியது !
----------------------------------------
1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்
2 - டீ
3 - காபி
4 - வெள்ளை சர்க்கரை
5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.

எந்தெந்த உணவுகள் என்னென்ன நோய்களை விரட்டும்?

நோய் எதிர்ப்பு சக்தி கூட - சுக்கு காபி குடிக்க வேண்டும்.
பசியை தூண்டுவதற்கு– புதினா, வெற்றிலை, சீரகம், பிரண்டை தண்டு.
தொண்டை வலி – திப்பிலி, துளசி, புதினா, தூதுவளை.
கர்ப்பபை, சிறுநீரக கல்லடைப்பு – வாழைத்தண்டு, திராட்சை, மாதுளை விதைகள்.
முதுகுத் தண்டுவலி – அருகம்புல், உளுந்து அவியல், பப்பாளி.

Monday, January 1, 2018

பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் எண்ணெய்கள்!!!

பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் பருக்கள். அதிலும் சீழ் நிறைந்த பருக்கள் வந்தால், அதுப்போக 3-4 நாட்களாவது ஆகும். அதுமட்டுமின்றி, இந்த வகையான பருக்கள் காய்ந்து உதிர்ந்த பின் கருமையான தழும்புகளை ஏற்படுத்தும். மேலும் இந்த தழும்புகள் அவ்வளவு எளிதில் போகாது.
ஆனால் பருக்களால் வந்த தழும்புகளைப் போக்க ஒருசில எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்தால், விரைவில் போக்கலாம். அதிலும் தினமும் அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், சீக்கிரம் போய்விடும். சரி, இப்போது பருக்களால் வந்த கருமையான தழும்புகளைப் போக்க உதவும் எண்ணெய்கள் என்னவென்று பார்ப்போமா!!!