Tuesday, August 18, 2015

இயற்கை முறையில் பயனுள்ள வைத்தியக் குறிப்புகள்

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

வெற்றிலை பயன்கள்!

*வெற்றிலையைத் தணலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சம அளவு இஞ்சிச் சாறு கலந்து தினமும் குடித்துவர நாள்பட்ட நுரையீரல் நோய்கள் குணமாகும்.
*கம்மாறு வெற்றிலைச் சாறுடன் வெந்நீர் கலந்து கொடுக்க வயிறு உப்புசம், மந்தம், தலைவலி, வயிற்றுவலி குணமாகும்.

"சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்..."

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது...

தினை சர்க்கரை சாதம்

என்னென்ன தேவை?
தினை, பாசிப்பருப்பு - அரை கப்
வெல்லம் - 1 கப்
நெய் - 4 டீஸ்பூன்
முந்திரி - 8
திராட்சை - 10
ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்

உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..!

தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது,
இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி மற்றும் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்தப் பெருமகான்களின் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

Saturday, August 15, 2015

சித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்

1) பொன்மேனி தரும் குப்பைமேனி                                                                                                                         குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

முகப்பருக்களை போக்கும் வேப்பிலை..!

சிலருக்கு கன்னம் முழுவதும் பருக்கள் இருக்கும், கைபட்டாலே எரிச்சலும், முகத்தை பார்த்தாலே வேதனை மட்டும் தான் மிஞ்சும்.
இவர்களுக்கு ஏற்ற அருமையான பொருள் தான் வேப்பிலை.
* ஒரு கொத்து வேப்பிலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள். பிறகு, பருக்களின் மீது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தி எடுங்கள்.
* வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை...

எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள்.

Sunday, August 2, 2015

வீட்டுக் குறிப்புகள்,

# கைப்பிடி அளவு கல் உப்பை சிறு மூட்டையாக முடிந்து, அரிசி மூட்டைக்குப் பக்கத்தில் வைத்தால் பூச்சிகள் அண்டாது.
# அரிசி, காய்கறிகளைக் கழுவிய தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றினால் நன்றாகச் செழித்து வளரும்.
# காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டால் பூச்சிகள் வராது.
# பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளி, செய்தித்தாளில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது.