Sunday, August 28, 2016

பளபள சருமத்துக்கு பப்பாளி!

* சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, இயற்கை அழகை அளிக்கிறது பப்பாளி.
* பப்பாளியுடன் சிறிது தேன் கலந்து தடவினால், சருமம் ஈரப்பதத்துடன் பொலிவாக இருக்கும்.
* பப்பாளியைக் கைகளால் நசுக்கி, முகத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவு பெறும்; முகப்பருக்கள் மறையும்.
* சருமத்தில் தொடர்ந்து தடவியும் உட்கொண்டும் வந்தால், சருமம் மென்மையாகும்.

தேன்

தனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும். அவை என்னவென்று பார்க்கலாம்.
* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட இதயம் பலம் பெரும்.
* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

Friday, August 26, 2016

லைஃப் ஸ்டைல் நோய்கள் தீர்க்கும் வழிகள்

ர்க்கரை நோய், இதய நோய்களை லைஃப் ஸ்டைல் நோய்கள் என்கிறது மருத்துவம். வாழ்க்கை முறை மாற்றத்தினால் நாமே வரவழைத்துக்கொண்ட நோய்கள் இவை. கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி என உடலில் வரும் வலிகளுக்கும், வாழ்க்கை முறை மாற்றமே காரணம். மேலும், தவறான முறையில் படுத்து உறங்குவது, உடலுக்கு வசதி இல்லாத நிலையில் அமர்வது என நாமேதான் வலிகளை வரவழைத்துக்கொள்கிறோம். நம் உடலின் அசைவுகளை கவனித்து, முறைப்படுத்துவதன் மூலம்,   வலிகளில் இருந்து மீண்டு, ஆரோக்கியதோடும் இயங்க முடியும்.

ஆரோக்கியம் காக்கும் 6 உணவுகள்

ஃபேஷன், டிரெண்ட் எனக் கருதி, தெருவோரக் கடைகளிலும் ஃபாஸ்ட்ஃபுட் கடைகளிலும் கிடைப்பதை  உண்டு, உடலை நோய்க்காடாக மாற்றி இருக்கிறோம். பாரம்பரிய உணவுகளில்தான் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. அவற்றை உண்டுதான் நம் முன்னோர் உடல் வளர்த்து; உயிர் வளர்த்து இன்புற்று வாழ்ந்தனர். 
அப்படி, ஆரோக்கியம் காக்கும் ஆறு உணவுகள் பற்றி இங்கே பார்ப்போம்...

லைஃப் ஸ்டைல் நோய்கள் தீர்க்கும் வழிகள்

ர்க்கரை நோய், இதய நோய்களை லைஃப் ஸ்டைல் நோய்கள் என்கிறது மருத்துவம். வாழ்க்கை முறை மாற்றத்தினால் நாமே வரவழைத்துக்கொண்ட நோய்கள் இவை. கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி என உடலில் வரும் வலிகளுக்கும், வாழ்க்கை முறை மாற்றமே காரணம். மேலும், தவறான முறையில் படுத்து உறங்குவது, உடலுக்கு வசதி இல்லாத நிலையில் அமர்வது என நாமேதான் வலிகளை வரவழைத்துக்கொள்கிறோம். நம் உடலின் அசைவுகளை கவனித்து, முறைப்படுத்துவதன் மூலம்,   வலிகளில் இருந்து மீண்டு, ஆரோக்கியதோடும் இயங்க முடியும்.

பச்சை தேங்காயின் பயன்கள்*

தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்........

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்

Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.
முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த சூரிய சக்தியை பயன்படுத்தினார். உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;

Wednesday, August 24, 2016

வழுக்கை தலையில் முடி வளர இயற்கை வழிகள்


ஆளிவிதை : விதையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் ஏராளமாக உள்ளது. இவை தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை, 2 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அப்படி கொதிக்கும் போது, அதிலிருந்து ஓர் ஜெல் போன்று வரும், அப்போது இறக்கி குளிர வைத்து, அந்த ஜெல்லை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

சிறுநீரகக் கற்களை கரைக்கும் தேங்காய்த்தண்ணீர்

தேங்காய்த் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.
சிறுநீரகக் கற்களை கரைக்கும் தேங்காய்த்தண்ணீர்

















Tuesday, August 23, 2016

திராட்சை

பழங்களில் நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் தான் திராட்சை. இந்த திராட்சையை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும், இப்பழத்தை ஜூஸ் போட்டுக் குடித்தாலும் இப்பழத்தின் முழு சத்துக்களையும் பெறலாம்.
அதிலும் திராட்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். சரி, இப்போது திராட்சை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

கருப்பை நோய்களுக்கு எளிய பாட்டி வைத்தியம் :-

* மாதவிடாய் கால வயிற்று வலியின் போது வயிற்றில் ஈரத்துணி போடலாம். வயிற்றை சுற்றிலும் விளக்கெண்ணெய் தடவலாம்.
* கருப்பை கோளாறுகளை தவிர்க்க வாழைப்பூ சாறு, பொரியல் வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* வெள்ளைப்படுதலை தடுக்க முருங்கைக் கீரை, தயிர் சேர்க்கவும். கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்.
* முருங்கைக் கீரை சூப், முடக்கத்தான் கீரை சூப், மணத்தக்காளிக் கீரை சூப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.