Tuesday, December 2, 2014

இரவு உணவுக்கு பின் செய்யக் கூடாதவை….!!

பொதுவாக நம்மில் பலர் இரவு உணவை முடித்து விட்டு உடனே செறிப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நடப்பது, டிரைவிங் செல்வது என்று ஏதாவது செய்வோம். உண்மையில், உணவிற்கு பின் நாம் ஓய்வெடுப்பது தான் சரி.
நாம் உட்கார்ந்திருக்கும் போது தான் வயிற்றில் இரதத்தின் ஓட்டம் சீராகி செறிமானம் சரியாக நடைபெறும். சாப்பிட்டு விட்டு பொதுவாக பலர் செய்யும் சில தவறுகள் குறித்தும் அவற்றால் ஏற்படும் விளைவு குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.
நடப்பது
நம்மில் பலர், சாப்பிட்டு முடித்தவுடன் நடப்பதால் செறிமானம் எளிதாகிவிடும் என்று நம்புகிறோம். இது முற்றிலும் தவறு. மனிதனின் அனைத்து உள்ளுறுப்பு செயற்பாடுகளுக்கும் மிகவும் அத்தியாவசியமானது இரத்த ஓட்டம்.
ஏனெனில், நமது உள்ளுறுப்புகள் செயல்படத் தேவையான சக்தி (energy or calories) ஆக்ஸிஜன் போன்றவற்றை எடுத்து செல்வது இரத்தம் தான். நாம் நடக்கும் போது நமது கால்களில் தான் அதிக இரத்த ஓட்டம் ஏற்படும்.
இதற்கு அடுத்த படியாக கைகளுக்கு இரத்த ஓட்டம் செல்லும். எனவே நமது வயிற்றிற்கு செல்லும் இரத்த ஓட்டம் சற்று தடைபடும். எனவே வயிற்றின் செயல்பாடான செறிமானம் மிக மெதுவாக அல்லது சில சமயங்களில் நின்று விடவும் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக வயிற்று வலி அல்லது தலைச் சுற்றல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே நாம் சப்பிட்ட உடன் கண்டிப்பாக நடப்பதை தவிற்பது நல்லது.
பல் துலக்குவது (Brushing Teeth)
பலர் இரவு உணவு முடித்த உடன் பல் துலக்குவதை பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் கண்டிப்பாகக் கூடாது. ஏனெனில் உணவுகளை மென்று சாப்பிடும் போது, பற்களுக்கு நிறைய வேலைகள் கொடுப்பதால், ஈறுகளில் சிறிதளவு இடைவெளி ஏற்பட்டு பல் சிறிது வலுவிழந்து இருக்கும்.
இந்நிலையில், நாம் பிரஷ் கொண்டு பற்களையும் ஈறுகளையும் அழுத்தி தேய்க்கும் போது, அந்த இடைவெளி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஈறுக்கிடையிலான இடைவெளி சரியாக சிறிது நேரமாகும்.
எனவே குறைந்தது 30 நிமிடங்கள் கழித்தே பல் துலக்க வேண்டும். குளியல் சாப்பிட பின் குளிக்கக் கூடாது, சாப்பிடும் முன் தான் குளிக்க வேண்டும் என்று பல முறை நம் பாட்டி தாத்தா கூறிக் கேட்டிருப்போம். ஆனால் பலருக்கு தூங்கும் முன் குளியல் போட்டால் நல்ல தூக்கம் வரும். எனவே சாப்பிட்ட உடன் ஒரு குளியலைப் போட்டுவிட்டு தூங்கிவிடுவார்கள். இதுவும் தவிற்க்கப்பட வேண்டிய ஒன்று. இதற்கான காரணமும் இரத்த ஓட்டம் தான். குளிக்கும் போது நமது கைகால்கள் அதிகமாக செயல்படுவதால் கை கால்களில் அதிக இரத்த ஓட்டம் பாயும். எனவே செறிமானம் தடைபடும். டிரைவிங் இந்த டிரைவிங் முறை நம்மில் பலர் அறிந்திராத ஒன்று. பொதுவாக வாகணப் பிரியர்களுக்கு இரவு டின்னரை முடித்து விட்டு ஒரு லாங் டிரைவ் சென்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். நன்றாக இருந்தாலும், இது உடலிற்கு கேடு தரக்கூடியது. சாதாரணமாக நம் வயிறு நிரம்பி இருக்கும் நிலையில் ஒரு விஷயத்தில் அதிக கவணம் செலுத்துவது கடினம். இதற்கு சான்றாக ஒரு பழமொழியைக் கூறலாம். இதனை ”உண்ட மயக்கம்” என்று குறிப்பிடுவர். ஏற்கனவே கூறியது போல, செறிமானத்தின் போது வயிற்றில் அதிக இரத்த ஓட்டம் இருக்கும். இதனால், மூளைக்கு இரத்த ஓட்டம் குறைவாகச் செல்லும். இந்நிலையில், மூளை தன் செயற்பாடுகளை குறைத்துக் கொண்டு சற்று ஓய்வெடுக்கும். இது தான் உண்ட மயக்கத்திற்கு காரணம். இந்த உண்ட மயக்கத்தோடு வாகணத்தில் கவனம் செலுத்துவது மிகவும் கடினம். உடனடியாக தூங்குவது இரவு என்றல்ல எப்போதுமே சாப்பிட்ட உடன் தூங்கினால், செரிமானப் பிரச்சனையுடன் வாயுத் தொல்லையும் ஏற்படும் அபாயம் உள்ளது. இது மட்டுமல்லாது, உடல் எடையும் கூடும். எனவே எப்போதும், சாப்பிட்டு முடித்து சுமாராக ஒரு மணி நேரம் கழித்தே உறங்க வேண்டும்.

No comments:

Post a Comment