Wednesday, December 24, 2014

முடக்கற்றான் சூப் & தோசை & ரசம்

தேவையான பொருட்கள்:
முடக்கற்றான் கீரை - 1 கப்   துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்  மிளகு - 1 டீஸ்பூன்  சீரகம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்  கடுகு - 1 டீஸ்பூன்  மிளகாய் வற்றல் - 3  புளி - எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிதளவு  பூண்டு - 1  உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.
தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம்
2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.
இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதார‌ண‌த் தோசைமாவுடன் (ஒரு பெரிய‌ கிண்ண‌ம் அள‌வு) க‌ல‌ந்து, தோசை சுட்டால், க‌ச‌ப்பு சிறிதும் தெரியாது.
நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

ரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ்
கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர்
விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம்
வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம்
தயாரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment