Showing posts with label கீரைகளின் மகத்துவங்கள். Show all posts
Showing posts with label கீரைகளின் மகத்துவங்கள். Show all posts

Tuesday, December 17, 2019

நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!

💊 முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
💊 வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
💊 கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---
ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

Friday, July 5, 2019

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த பாலக்கீரை..!!

பசலைக்கீரையில் மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் இருக்கின்றன. அதோடு பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து மற்றும் உப்பின் காரச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன.

Tuesday, August 29, 2017

முக்குரட்டை கீரை-நீரிழிவு மற்றும் மன அழுத்ததிற்கு அருமருந்து.....

நீரிழிவுக்கு அருமருந்து
உடலில் இன்சுலினானது கணையத்தில் உள்ள β-cellகளில் உற்பத்தி ஆகிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளில் இந்த β-cells குறைந்து விடுவதால் சர்க்கரை அதிகமாக இரத்த்தில் காணப்படுகிறது. முக்குரட்டை கீரையை உணவில் 4 வாரங்கள் சேர்த்தால் β-cells எண்ணிக்கையை குறையாமல் காக்கிறது. இதனால் அவர்களில் உடல் மேலும் பாதிப்படையாது. சர்க்கரை அளவும் கணிசமாக குறைகிறது. 
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் இக்கீரையின் இலைச்சாற்றைப் பருகினால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Sunday, August 27, 2017

மூட்டு வலி நிவாரணம் தரும் முடக்கத்தான் ரசம்

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரும் வல்லமை பெற்றது முடக்கத்தான் கீரை. இந்த கீரையை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடியளவு,
புளி - நெல்லியளவு,
உப்பு - தேவைக்கு
பூண்டு - 5 பல்,
காய்ந்த மிளகாய் - 3, 
மஞ்சள் தூள் - சிட்டிகை
மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
நெய், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.

Thursday, August 24, 2017

எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன்...?

கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.

Friday, August 18, 2017

*மணத்தக்காளிக் கீரையின் மருத்துவப் பயன்கள்*

1. மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள் தீரும்.
2. கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளைபும் சேர்த்துக் கொதிக்கவைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவை குணமாகும்.
3. மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதைத் தேனோடு சேர்த்து சர்பத் (syrup) போல் காய்ச்சி, தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருக்கும்.

Friday, January 27, 2017

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

Saturday, December 31, 2016

மூல நோய் நீங்கிட...துத்தி இலை

மூலநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு.
எந்த வகை மூலநோயாக இருந்தாலும் ...
எங்கும் சாதாரணமாக காணப்படக்கூடிய துத்தி இலைகளை நன்கு அலசி எடுத்து துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்து கீரை சைமைப்பதுபோல் செய்து தினசரி மதியம் சாப்பாட்டுடன் சாப்பிட்ட வேண்டும்.
காலை ,மாலை துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு சாப்பிட்டு விட்டு மோர் குடிக்க வேண்டும்.
துத்தி இலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி அதை சூடு ஆறினதும் ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை லங்கோடு கட்டிக்கொண்டு இரவு உறங்கவும்.
காரமான உணவு தவிர்க்கவும்.
வாரம் ஒருமுறை ஆயில் பாத் செய்யவும்.
மேற்கண்டவாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்துவர மூலநோய் குணமாகும்.

Friday, December 30, 2016

துத்திக்கீரை

கீரைகளின் பயன்களை அனைத்து மக்களும் உணரத் தொடங்கிவிட்டனர். காலை நேரங்களில் கீரைக் கட்டுகளை மக்கள் வாங்கிச் செல்வதை நாம் காண்கிறோம்.

குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் இதன் மகிமையை சில காலம் மறந்து நோய்களின் உறைவிடமாக தங்கள் உடம்பை ஆக்கிக் கொண்டு விட்டனர் பலர்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் குணம் கீரைகளுக்கு அதிகம் உண்டு என்பதை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூலிகை சமையல் என்னும் தலைப்பில் ஒவ்வொரு கீரையைப் பற்றி அறிந்து வருகிறோம்.

இந்த இதழில் கிராமங்களில் அதிகம் கிடைக்கும் துத்திக்கீரையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

துத்திக் கீரை


பசுமையான இலைகளை உடைய துத்திக் கீரை பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு கீரை வகையாகும். மஞ்சள் நிறத்தில் அழகாக பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். புதர்களாக சாலை ஓரங்களில் வளரும்.

மூலநோய் கட்டி முளை புழுப்புண்ணும் போகுஞ் 
சாலவதக் கிக்கட்ட தையலே-மேலும் அதை
எப்படியேனும் புசிக்க எப்பிணியுஞ் சாந்தமுறும்
இப்படியீற் றுத்தியிலை யை

Wednesday, December 28, 2016

மணத்தக்காளி கீரை

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன.
நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து.

Sunday, December 11, 2016

முடி உதிர்தல் - முடக்கத்தான் கீரை



தற்போதுள்ள இளைஞர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது இந்த முடி உதிர்தல்தான். முறையான பராமரிப்பு இல்லாததால் இளம் வயதிலேயே அதிகமாக முடி உதிர ஆரம்பித்து விடுகிறது. இதனை முடக்கத்தான் கீரைக் கொண்டு சரி செய்யலாம்.

Thursday, February 12, 2015

மணத்தக்காளி மருத்து குணங்கள்:-

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன.

Wednesday, February 11, 2015

சிகரெட்... புகையிலை... தீர்வுக்கு அகத்திக் கீரை!

அகத்திக் கீரையின் தாயகம் மலேசியா என்று சொல்கிறார்கள். அகத்தில் உள்ள தீயைப் போக்குவதால் அகத்திக் கீரை என்று அழைக்கப்படுகிறது என்கிறது சித்த மருத்துவ நூல்கள். அகத்திக் கீரை தமிழ்நாட்டு மக்கள் உணவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

Friday, January 30, 2015

பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் எனினும் அதிலே பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. 

Saturday, January 10, 2015

சில கீரையில் உள்ள சத்துக்கள் ....

வெந்தயக் கீரை : கால்ஷியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93மி.கி. உள்ளன. பார்வைக் கோளாறு ரத்த சோகையைப் போக்கும். (கீரைகளை நன்கு கழுவவும்)

Wednesday, December 24, 2014

முடக்கற்றான் கீரை

பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான். இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு. 

Wednesday, December 10, 2014

நோய்களை தீர்க்கும் கீரைகள்.....

காய்கறிகளில் மிகவும் சத்தானவை கீரை வகைகள்:
ஒரு கிலோ முளைக்கீரையில், 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான வைட்டமின் ஏ சத்து உள்ளது.
ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்பு சத்தைப் பெற 113 கிலோ ஆப்பிள்களை சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக்கீரையில் சுமார் 32 கிலோ அன்னாச்சிப்பழத்திற்கு நிகரான சத்து நிறைந்துள்ளது.

Friday, December 5, 2014

சத்து நிறைந்த தண்டங்கீரை சூப்

தண்டங்கீரையை கடையில் வாங்கிய அன்றே சமைப்பது நல்லது. கீரையை நல்ல தண்ணீரில்தான் கழுவ வேண்டும். ஒருபோதும் வெந்நீரில் கழுவக்கூடாது. சூடான வெந்நீரில் கழுவினால், அதன் சத்துகள் கிடைக்காமல் போய்விடும். கீரைத்தண்டு சூப் தயாரிக்க தேவையான பொருட்கள் வருமாறு:- 

Monday, December 1, 2014

மணத்தக்காளி கீரையின் மருத்து குணங்கள்

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன.