Saturday, December 6, 2014

கூந்தல் உதிர்வை தடுக்கும் செம்பருத்தி பூ

ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும். செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறியபின் கூந்தலை சீயக்காய் போட்டு அலசவும். 
கூந்தல் நன்றாக வளரும். கடுக்காய், செம்பருத்தி பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சமஅளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும். முடிசெழித்து வளர வாரத்திற்கு ஒரு முறை வெண்ணெய்யை தலைக்கு தடவி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும். 
கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும். வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக்போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி மிருதுவாக வளரும்.
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலை 10 கிராம் சேர்த்து எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்கவேண்டும். 
சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத்துணியில் அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து வந்தால் முடி கருமையாகும், அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

No comments:

Post a Comment