Monday, March 13, 2017

சுண்டைக்காய்


நாம் ஒன்றைச் சிறுமைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால் அதனுடன் சுண்டைக்காயை ஒப்பிட்டுச் சொல்வது வழக்கம். 


ஆனால், குட்டி குட்டியாய் உள்ள சுண்டைக் காய், பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.

உதாரணமாக, சுண்டைக்காயில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன.

Thursday, March 9, 2017

வறட்டு இருமலுக்கு உடனடி நிவாரணம்

இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட குணம் தெரியும்.
பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் உள்ள சளி நீங்கி விடும்.

Wednesday, March 8, 2017

இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால், உடலில் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வைக் காணலாம்.
குறிப்பாக இஞ்சிப் பால் குடித்தால், இரத்தக் குழாய்களில் தங்கி அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்கள் கரையும், வாய்வுத் தொல்லை நீங்கும். அதுமட்டுமின்றி, பலரும் குனிந்து தன் பாதத்தை பார்க்க முடியாத அளவிலான தொப்பையைக் குறைக்க முடியும்.

Sunday, March 5, 2017

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை



கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் யங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.

Thursday, March 2, 2017

பிரண்டை


கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரமுறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள் எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை,மல்லிதலை,தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ......