Monday, May 8, 2017

குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம்

குறட்டை பிரச்சனைக்கு குண்டாக இருந்தாலோ, நேராக படுத்தாலோ, தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டாலோ, சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ, சைனஸ் பிரச்சனை இருந்தாலோ, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ வரக்கூடும்.
* ஆவி பிடிப்பது ஆவி பிடிப்பதன் மூலம் நாசி துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீங்கும். இதனால் இரவில் மூச்சு விடுவதில் சிரமம் ஏதும் இருக்காது.

கோடை காலத்தில் உடலை குளிர்விக்கும் உணவுகள்

கோடை காலம் உடல் நலத்திற்கு பல்வேறு வகையில் இடையூறு விளைவிக்கும். தோல் நோய்கள் தலைதூக்கும். அம்மை நோய், மஞ்சள் காமாலை போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். ஒருசிலர் குளிர்காலம் மட்டுமின்றி கோடை காலத்திலும் ஜலதோஷ பிரச்சினையால் அவதிப்படுவார்கள்.
மோர், இளநீர் பருகினாலே ஜலதோஷம் பிடிக்கக் கூடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறவர்கள் மோருடன் சிறிது மிளகு தூளை சேர்த்து பருகலாம். மோருடன் கீழா நெல்லியை அரைத்து சாறு பிழிந்து குடிக்கலாம். அதனை காலை வேளையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது.

மாசிக்காய்

சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், ஓர் அற்புதமான மருந்து.
மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
மாசிக்காயை பொடி செய்து, அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும், அதிகரத்தப் போக்கு கட்டுப்படும். மாசிக்காயை பொடித்து, 50 கிராம் எடுத்து, 800மி.லி.,நீருடன் கலந்து, 10 நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை, 30 மி.லி., முதல் 60 மி.லி., வீதம் அருந்திவந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நாட்பட்ட இருமல், பெருங்கழிச்சல் முதலியவை குணமாகும்.