Sunday, December 14, 2014

'சுக்கு மல்லி காபி'

தேயிலை, காபி போன்ற பானங்களை அருந்துவது நம் நாட்டின் பழக்கமல்ல. அவையெல்லாம் மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே. நம் நாட்டின் பெரும் பகுதிகள் வெப்பமிகுந்த பகுதியாக இருப்பதால், இங்கு வாழ்ந்த நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, மல்லி, பனைவெல்லம் கலந்த பானமும், மாலையில் சுக்கு, மல்லி, மிளகு கலந்த மூலிகை குடிநீர் பானமும், இரவு வேளைகளில் கடுக்காய் கசாயமும் அருந்தி முதுமையிலும் இளமையாக வாழ்ந்து வந்தனர்.
இப்போது மாறிப் போன பாரம்பரியங்களின் மத்தியில், பலஇடங்களில் சுக்கு மல்லி காபியெல்லாம் மறைந்தே போய் விட்டது.
சுக்கு மல்லி காபியின் பயன்கள்
அதிகபடியான் பித்தம் குறையும்
உடலின் வெப்பத்தை சிராக வைத்து கொள்ளவுதவும்.
மழைக்காலங்களில் ஏற்படும் சளி.காய்ச்சல் குணமாகும்.
ஜீரணத்தைத் துண்டி,பசியை அதிகரிக்கும்
டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில்/டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானாமாகும். அதன் கெடுதல் இதில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடலாம்.
செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும்.
அற்புத முதலுதவி மருந்து நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயுதொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும்.
சுக்கு மல்லி காபி பொடி தயாரிப்பது எப்படி?
தேவையானவை:
சுக்கு -- 50 கிராம்
மிளகு -- 15 கிராம்
சதகுப்பை -- 15 கிராம்
திப்பிலி -- 15 கிராம்
சித்தரத்தை -- 15 கிராம்
தேசாவரை குச்சி -- 15 கிராம்
கொத்தமல்லி -- 150 கிராம்
ஏலக்காய் -- 15
செய்முறை
எல்லா பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து வைக்கவும்.
சித்தரத்தை என்பது கட்டியாக இருக்கும், அதை வறுத்தபின் நன்கு தட்டி உடைத்து நசுக்கியபின் பயன் படுத்தவேண்டும்.
பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவேண்டும்.

2 comments: