Monday, December 8, 2014

'ரூல் 32 ' என அறியபடும் உண்ணும் முறை

நண்பர் ஒருவர், 'ரூல் 32 ' என அறியபடும் உண்ணும் முறையை சில மாதங்களுக்கு முன்னால் அறிமுக படுத்தினார்.
ரூல் ஒன்றும் ரொம்ப பெரியது அல்ல; நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதே உண்வை 32 முறை மென்று விழுங்க வேண்டும். அப்படி மெல்லும் போது, வாயை திறக்க கூடாது.
பதினைந்தே நாளில் , உடம்பு நல்ல நிலைக்கு வந்தது. எடை குறைந்து எனர்ஜியும் ஏறியது.
இப்படி மென்று சாப்பிடும் சமயத்தில், நான்கு இட்லிகளை சாப்பிடுபவர்களால் இரண்டு இட்லி மட்டுமே சாப்பிட முடியும் . ஆனாலும் பசி அடங்கி, தெம்பு அதிகரிக்கும். இத்தனை நாள், இரண்டு இட்லிகளை தேவைக்கு அதிகமாக உண்ட உணர்வு ஏற்படும்.
முதலில் 32 முறை எண்ணுவது சிரமமாய் இருந்தாலும், நாளடைவில் எண்ண தேவை இருக்காது. உண்வும் , உமிழ் நீரும் வாயில் இருக்கும் நிலையிலேயே, அதை விழுங்க வேண்டிய நேரத்தை நீங்கள் உணரலாம்.
சோறு சாப்பிடும் போது, சிலருக்கு மென்ற ருசி பிடிக்காமல் போகலாம். ஆனால், அதிலும் நன்மை இருக்கிறது. அதிக காய்கறிகளை ஒவ்வொரு கவளத்துடனும் சேர்த்து உண்டால் , ருசி கிடைத்து விடும்.
சிலருக்கு நேரம் பிரச்சினையாக இருக்கலாம். குறைந்த பட்சம் இருபது நிமிடத்தை நீங்கள் இதற்கு ஒதுக்க வேண்டும்.
எனக்கு வேண்டிய பலருக்கும் இதை பற்றி சொல்கிறேன். ஆனாலும் அந்த பலரில் பலர் , இன்னமும் தொடங்காமல் இருக்க காரணம் 'இதை நாளையிலிருந்து ஆரம்பிக்கிறேன்' என்று சொல்லி ஒத்தி போடுவதுதான்.
திரும்பவும் சொல்கிறேன். 15 நாட்களுக்குள், பலனை நீங்கள் அனுபவிக்கலாம்.

No comments:

Post a Comment