Friday, December 5, 2014

சத்து நிறைந்த தண்டங்கீரை சூப்

தண்டங்கீரையை கடையில் வாங்கிய அன்றே சமைப்பது நல்லது. கீரையை நல்ல தண்ணீரில்தான் கழுவ வேண்டும். ஒருபோதும் வெந்நீரில் கழுவக்கூடாது. சூடான வெந்நீரில் கழுவினால், அதன் சத்துகள் கிடைக்காமல் போய்விடும். கீரைத்தண்டு சூப் தயாரிக்க தேவையான பொருட்கள் வருமாறு:- 
தண்டங்கீரை - ஒரு கட்டு, 
தக்காளி - 1, 
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன், 
மல்லி இலை - சிறிதளவு, 
வெங்காயம் - 1, 
மிளகு தூள் - அரை ஸ்பூன்,  
உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:- 

• வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• கீரையை நன்றாக பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். வாணலியில் தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்த பின்பு, கீரையை அதில் போட்டு, நறுக்கிய தண்டுகளையும் போட வேண்டும். 

• ஓரளவு கொதித்த பின்பு நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட வேண்டும். 

• மஞ்சள் தூளை தூவி கிளறவும். மீண்டும் கொதித்த பின்பு, கொத்தமல்லி இலையை போட்டு, தேவையான உப்பு, மிளகு தூள் சேர்க்க வேண்டும். 

• நன்கு கொதித்து மணம் வீசியதும் இறக்கினால், தண்டங்கீரை சூப் ரெடியாகிவிடும்.

No comments:

Post a Comment