Wednesday, December 3, 2014

கொடம்புளி வைத்தியம்

சிசேரியன் அறுவை சிகிச்சை ஆனவர்களுக்கும், அதிக இரத்தப் போக்கு இருப்பவர்களுக்கும், கருப்பையுள் காயங்கள் அல்லது இரத்தக்கட்டு இருப்பவர்களுக்கு
கொடம்புளி வைத்தியம் :
• பழைய புளி - ஒரு சின்ன கோலி குண்டு அளவு
• கொடம்புளி அல்லது கொடுக்காய் புளி - 2
• கொத்தமல்லி விதை (வறுத்து பொடித்தது) - ஒரு டீஸ்பூன்
• சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
• பசுமஞ்சள்-ஒரு விரல் நீளம் - அரைத்து விழுதாக்கியது
• வெந்தயம் - 1 டீஸ்பூன்
• சோம்பு - 1 டீஸ்பூன்
• கருவேப்பிலை
• நல்லெண்ணெய்
• கடுகு
• கல்உப்பு
கொடம்புளியை விதை நீக்கி, வேக விட்டுக் கொள்ளுங்கள். புளியை இரண்டு தம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். இரும்பு அல்லது மண் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து, புளி கரைசலை விட்டு, வெந்த கொடம்புளியை சேர்த்து, கொத்தமல்லிவிதைப் பொடி, பசுமஞ்சள், சாம்பார் பொடி கல்உப்பு சேர்த்து ஒரு தம்ளர் அளவுக்கு சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். இதை சூடான சாதத்தில் நெய் விட்டு கலந்து சாப்பிட்டால் வாய்க்கு ருசியாக இருக்கும். இண்டாலியம் அல்லது அலுமினியப் பாத்திரத்தை பயன்படுத்த வேண்டாம்.
சிசேரியன் அறுவை சிகிச்சை ஆனவர்களுக்கும், அதிக இரத்தப் போக்கு இருப்பவர்களுக்கும், கருப்பையுள் காயங்கள் அல்லது இரத்தக்கட்டு இருப்பின் அவற்றை குணமாக்க புளியும் மஞ்சளும் உதவுகிறது.
ஆயுர்வேதத்தில் கொடுக்கா புளியின் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டு பரிந்துரைக்கப் படுகிறது. அது செரிமானம் மேம்படுத்தவும், கீல்வாதம் மற்றும் சில கருப்பை நோய்களுக்கு மருந்தாகப்பயன்படுத்தப்படுகிறது. இது புண்களை குணப்படுத்தும்.
வாத நோய் மற்றும் மூட்டு வலிக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் நோய்வாய் பட்டு சரியானதும் உடல் சூட்டில் பேதி ஆகாமல் இருக்க கொடுக்காபுளி தரப்படுகிறது. இது ஒரு சிறிய புளிப்பான பழம். உடல் எடை குறைய மிகவும் அற்புதமான மருந்தாக ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவம் பரிந்துரைக்கிறது. குடல் அழற்சி, பெருங்குடல் தொடர்பான எந்த பிரச்சனைக்கும் இது நல்ல மருந்து.

No comments:

Post a Comment