Monday, February 4, 2019

** பக்கவாதம் **

பக்கவாதம் அல்லது பாரிசவாதம்(stroke) என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும்[1] குருதி உறைதல், குழலியக்குருதியுறைமை போன்றவற்றால் அல்லது குருதிப்பெருக்கினால் குருதி வழங்கல் குறைவடையும்போது இது நிகழக்கூடும். மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறையும்போது மூளையின் உயிரணுக்களுக்குத்தேவையான ஊட்டச்சத்துக்களும், பிராண வாயுவும் கிடைக்காமல் போவதினால் பாதிக்கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய், உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. அத்துடன், புரிந்துகொள்ள முடியாமை, ஒழுங்காகப் பேசமுடியாமை, பார்வைப் புலத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடியாதிருத்தல் போன்றவையும் ஏற்படலாம்.