Sunday, December 7, 2014

வள்ளலாரின் நீர் சிகிச்சை :

அன்றாடம் நாம் பயன்படுத்தும் குடிநீரில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது என்று அறிந்திருக்கிறோமோ இல்லையே, சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார் நன்கு உணர்ந்து இருந்தார். அதைத் தம் பாடல் வரிகளிலும் குறிப்பிட்டுள்ளார். தண்ணீரைக் குடிப்பதற்கு பயன்படுத்தும் முன் அதைக் காய்ச்சித்தான் குடிக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அதுவும் எப்படித் தெரியுமா?
ஒரு லிட்டர் தண்ணீரைக் கால் லிட்டர் ஆகும் வரை நன்றாகக் கொதிக்க வைத்துப் பின் ஆரவைத்துப் பருக வேண்டும். அது உடலுக்கு ஆரோக்கியம் என்று கூறியிருக்கிறார்.
மண் பானையில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைப்பதை நம்முடைய அன்றாட வழக்கத்தில் செய்வதில்லை. அப்படிச் செய்வதைப் பார்க்கின்ற வாய்ப்பும் நமக்கில்லை. நவீனம் மிகுந்துவிட்ட இந்த காலத்தில் மண்பானைகளை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்?
வள்ளல் பெருமானார் கூறியது இதைத்தான். மண்பானையில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி அது கால்லிட்டராக ஆகும் வரைக் கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடிக்கும் பொழுது அந்த நீர் உடலில் பலவித நோய்களைக் குணப்படுத்தும் ஒரு மருந்தாக மாறுகிறது என்பதை வள்ளலார் கண்டறிந்திருக்கிறார். அதைத் தனது பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தண்ணீரை எவர்சில்வர், அலுமினியம் போன்ற பாத்திரங்களில் ஊற்றி கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது. அப்படிக் குடிக்கும்பொழுது அதில் உள்ள உயிர்ச்சத்துக்கள் ஆவியாகிவிடுகிறது. இந்த நீரால் உடலுக்குத் தீங்கு தான் விளையும்.
மண்பானையில் நீரை ஊற்றிக் கொதிக்க வைத்துக் குடிக்கும் பொழுது அதில் மண் சத்து அதிகம் கிடைக்கிறது. மண்பானை காற்றில் உள்ள அதாவது பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை கிரகித்துக்கொண்டு நீருக்குள் அனுப்புகிறது. எனவே இந்த நீர் மருத்துவ குணம் கொண்டதாக மாறுகிறது. இதைப் பருகும் பொழுது நம் உடலில் உள்ள நோய்கள் குணமாகி ஆரோக்கியம் பெறுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. ஆனால் நாள் முழுவதும் பானையில் கொதிக்க வைத்த இந்த தண்ணீரை மட்டுமே அருந்தக் கூடாது. ஏனென்றால் கொதிக்க வைத்த தண்ணீரின் தன்மை வேறு, சாதாரணத் தண்ணீரின் தன்மை வேறு.
உதாரணத்திற்கு ஒரு நாளைக்கு நீங்கள் பத்துலிட்டர் தண்ணீர் அருந்துவதாக இருந்தால் அதில் 5 லிட்டர் நீரான கொதிக்க வைக்காத வடிகட்டாத தண்ணீரை அருந்துங்கள். மீதி பாதியளவு நீரை (5லி) மண்பானையில் கொதிக்க வைத்துக் குடியுங்கள். ஏனென்றால் கொதிக்க வைக்காத, வடிக்கட்டாத நீரிலுள்ள சத்துக்களும் உடலுக்குத் தேவை. அதில் மட்டுமே உயிர்சத்துக்கள் இயற்கையிலேயே நம் உடலுக்கு நன்மை செய்யும் வண்ணம் அதில் கலந்து இருக்கின்றன. என்ன தான் மண்பானையில் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பது நன்மை என்றாலும் அதில் உயிர்சத்துக்கள் அழிந்து போயிருக்கும்.
எனவே தண்ணீரை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.
1. சாதரணமாக உள்ள நீர் (கொதிக்க வைக்காத வடிகட்டாத நீர்)
2. மண்பானையில் கொதிக்க வைத்த தண்ணீர்.
3. மற்ற பாத்திரங்களில் கொதிக்க வைத்த தண்ணீர் (எவர்சில்வர், அலுமினியம்).
இதில் மற்ற பாத்திரத்தில் ( எவர்சில்வர், அலுமினியம்) கொதிக்க வைத்த தண்ணீரை மட்டும் கண்டிப்பாக பயன்படுத்தவே வேண்டாம். அது உடலுக்குத் தீங்கைத்தான் விளைவிக்கும்.
எனவே சாதாரண நீரையே நாம் அனைவரும் குடிப்பதற்கு முயற்சி செய்யலாம் அல்லது மண்பானையில் கூட தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கலாம். தண்ணீர் தாகத்தைப் போக்குவதோடு ஆரோக்கியத்தையும் நம் உடலில் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவோம்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

1 comment:

  1. தண்ணீர் பலமருத்துவ குணங்களை தனகத்தே கொண்டுள்ளது. தண்ணீரில் இருக்கும் நற்குணமே நம் உடலுக்குதேவையான ஆரோக்கியத்தை தரும் தண்ணீர் மருத்துவத்தின் நன்மைகள்

    ReplyDelete