Monday, December 1, 2014

இயற்கை மருத்துவம்,

# தினமும் காலையில் சாப்பிட்டவுடன் வென்னீரில் தேன் கலந்து குடித்து வர ஞாபக சக்தி அதிகமாகும்.

# கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட மூட்டு வலி குணமாகும்.
# திருநீற்றுப்பச்சை இலைச்சாற்றை மூக்கில் நுகர தும்மல் வந்து மூளைக்காய்ச்சல் கிருமி வெளியேறும்.

# வெள்ளைப்பூண்டை கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும்.

# தும்பை இலைச்சாறு எல்லா விஷக்கடிகளுக்கும் சிறந்த்து.

# வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து ஒரு வாரத்திற்குப்பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒரு நாள் கழித்து மறுநாள் வேக வைத்த நீரை கொண்டு தலை முழுகி வந்தாலும் முடி உதிர்வு நிற்கும். பேன் நீங்கும்.


# கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வர தலைமுடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

# உளுந்தம் பருப்பை மாவாக நன்கு அரைத்து பால் சர்க்கரை தேவையான அளவு சேர்த்து கஞ்சியாக காய்ச்சி காலை வேளைகளில் பருகி வர இதயம் பலம் பெறும். உடல் உறுதியாகும்.


# வாழைப்பழத்தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.


# சுண்டைக்காய் வத்தலை பொடி செய்து பவுடராக்கி சமையலில் சேர்த்து வர சளி, கபம் கரையும்.


# மாதுளம் பூவை உலர்த்தி பட்டை காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை ரணம் நீங்கும்.
முட்டையின் வெண் கருவை பஞ்சில் தேய்த்து முகம், கழுத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து ஈரப்பஞ்சினால் மெதுவாக துடைக்க முகச்சுருக்கம் நீங்கும்.


# நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
முருங்கைப்பூக்களை பசும்பாலில் போட்டு காய்ச்சி 41 நாட்கள் தொடர்ந்து குடித்து வர தேகம் கட்டமைப்பு பெறும். தாது விருத்தியாகும்.

No comments:

Post a Comment