Monday, December 1, 2014

இயற்கை மருத்துவம்,

# காரட், பீட்ரூட் சாப்பிடுவதால் மஞ்சள் காமாலையை தவிர்க்கலாம்.

# மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி சாப்பிட்டால் வரட்டு இருமல் குணமாகும்.
# வாழைப்பூவை சமையலில் வாரம் ஒருமுறை சேர்த்து வர வயிற்றுப்புண் குணமாகும்.

# கானா வாழை, வேர், தண்டு, இலை இவைகளுடன் அருகம்புல் சம்மாக சேர்த்து அரைத்து கொட்டை பாக்கு அளவு எடுத்து பாலில் கலந்து கொடுக்க இரத்த பேதி குணமாகும்.

# உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி ப்ப்பாளிக்காய் சாப்பிட வேண்டும்.


# கீழாநெல்லி செடியை கழுவி சுத்தம் செய்து அப்படியே மைய அரைத்து மோருடன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை இரண்டு நாளில் குணமாகும்.

# வெற்றிலையுடன் சிறிது ஓமத்தை சேர்த்து அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வயிற்றுப்போக்கு உடனே நிற்கும்.

# வாதநாரயண இலையைக் காய வைத்து தூளாக்கி ஐந்து கிராம் தூளை சுடுநீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வாயுத்தொல்லை நீங்கும்.

# எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத்தலைவலி தீரும்.

# அதிமதுரம் வில்லை அளவு துண்டு பால் விட்டு அரைத்து தலையில் தடவி 25 நிமிடம் கழித்து வெந்நீரில் 3 வாரம் குளித்து வந்தால் தலைபேன் போகும்.

# எலுமிச்சை சாற்றால் கைகளை கழுவி காயவிட்டு பின் மருதாணி இட்டுக்கொண்டால் மருதாணி சிவப்பாக பிடிக்கும்.

# நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.


# கை கால் உணர்வு இல்லாமல் இருந்தால் 50 கிராம் வேப்ப எண்ணெயில் கட்டி கற்பூரம் ஊறவைத்து தினசரி காலையில் எழுந்தவுடன் உணர்வு இல்லாத இடத்தில் சூடு பறக்க தேய்த்து வர உணர்வு திரும்பும்.


# மஞ்சள் துண்டுகளை சுண்ணாம்புத் தெளிவு நீரில் ஊற வைத்து உலர்த்தி இடித்து தூள் செய்து தேக்கரண்டி தேன், வென்னீர் அல்லது பாலில் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.


# செம்பருத்தி பூவை நீரில் போட்டு அரைமணி நேரம் கழித்து அந்த நீருடன் பூவையும் சாப்பிட்டு வர உடல் நிறம் சிவப்பாகும்.


# இரண்டு இஞ்சித்துண்டுகளை இடித்து சாறு பிழிந்து வைத்து தெளிந்த நீரை கீழே ஊற்றி அடியில் உள்ள மண்டியை தேனுடன் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வர பருக்கள் மூன்று நாட்களில் குணமாகும்.


# சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் பொடி செய்து கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து தயிருடன் கலந்து குடிக்க வயிற்று உப்பசம், பேதி குணமாகும்.

No comments:

Post a Comment