Monday, December 1, 2014

இயற்கை மருத்துவம்,

# மருதாணி மஞ்சள் சேர்த்து அரைத்து காலில் ஆணி பாய்ந்த இடத்தில் கட்டி வர காயம் குணமாகும்.

# ஓமத்துடன் பூண்டு பொடி செய்து போட்டு கசாயம் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.
# தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது அடைப்பு நீங்கும்.

# மாதுளம் பூவை கசாயம் செய்து குடித்து வர வயிற்றுக்கடுப்பு குணமாகும்.


# சுரைக்காய் வாரம் 2 தடவை சாப்பிட தொப்பை குறையும்.


# தாமரை இலை, பூ உலர்த்தி தூள் செய்து காபி போல் பருகி வர இருதயம் பலம் பெறும். இரத்தம் சுத்தம் அடையும். ஞாபக சக்தி பெருகும்.


# நாவல் பழம் வாயுத்தொல்லை, வயிற்றுப்புண்களை ஆற்ற வல்லது.

# கருந்துளசி இலைச்சாறு பிழிந்து இரண்டு வேளை 3 நாட்கள் சாப்பிட்டு வர கபக்கட்டு வெளியேறும்.


# சௌசௌ சாப்பிடுவதால் எலும்புகளுக்கு உறுதியும், பற்களுக்கு பலமும், ஜீரண சக்தியும் கிடைக்கறது.


# வாழைப்பூ வாரம் ஒருமுறை சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.


# நாயுருவி வேரை அரைத்து கோலி குண்டு அளவு உருட்டி 15 நாள் சாப்பிட்டு வர வெறிநாய் கடி குணமாகும்.


# அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 4 ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.


# கருணைக்கிழங்கு வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் மூலம் கட்டுப்படும்.


# கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டால் அக்காலங்களில் ஏற்படும் உடல் சோர்வை நீக்கி பலம் பெறும்.

No comments:

Post a Comment