Monday, December 1, 2014

இயற்கை மருத்துவம்,

# வெள்ளைப்பூண்டு, வெற்றிலைக்காம்பு, வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து வென்னீரில் அரைத்து உள்ளுக்கு கொடுக்க குழந்தைகளின் மாந்தம் குறையும். சளி தொல்லை நீங்கும்.

# சோம்பு, கொத்தமல்லி, சுக்கு, பனைவெல்லம் சேர்த்து கசாயம் செய்து சாப்பிட்டு வர மார்பு எரிச்சல் குணமாகும்.
# ஆண்டுக்கு ஒரு முறை மருதாணி இடுவதால் மனக்கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு சேர்த்து, வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் மூச்சுப்பிடிப்பு குணமாகும்.

# ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து காலில் கட்ட, எவ்வளவு சிறிய கண்ணாடித் துண்டாயிருந்தாலும் வெளியேறி விடும்.


# கை கால் வெடிப்பு குணமாக மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் சரிசம்மாக தடவி வரவும்.


# நல்ல சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் கலந்து குழப்பி தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.


# கற்றாழை சாறையும் மஞ்சள் தூளையும் அரைத்து விளக்கெண்ணைய் விட்டு சூடு படுத்தி பூசி வர நகசுத்தி குணமாகும்.

# புரசவிதை, வாயுவிளாங்கத்தை பவுடராக்கி நெல்லிக்காய் பவுடர் சேர்த்து தேன் அல்லது வெண்ணெயுடன் சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் வாழலாம்.


# நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டு வர எலும்பு காய்ச்சல் குணமாகும்.


# வசம்பு தூளை தேங்காயெண்ணெயில் சிவக்க கொதிக்க வைத்து வடிகட்டி சிரங்கு மீது தடவி வர சொறி சிரங்கு குணமாகும்.


# வல்லாரை கீரையை பசும்பாலில் அவிய விட்டு உலர்த்தி பொடியாக்கவும். இந்த பொடியை வாரம் ஒருமுறை பால், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் வராது.


# கடுக்காய் வேர், பட்டை, இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை அரை கரண்டி பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர தொழுநோய் குணமாகும்.

No comments:

Post a Comment