Saturday, July 25, 2015

குதிரைவாலி தக்காளி தோசை

சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி. புழுங்கல் அரிசியில் தோசை வார்த்துச் சாப்பிடுவதைக் காட்டிலும், குதிரைவாலி அரிசியில் தோசை செய்து சாப்பிட்டுப்பாருங்கள்... சுவையும், சத்தும் அற்புதமாக இருக்கும்.
பலன்கள்
இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தசோகை வராமல் தடுக்கும். நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவரும் சாப்பிட உகந்தது.
குதிரைவாலி தக்காளி தோசை

4 கப் குதிரைவாலி அரிசியுடன் ஒரு கப் உளுந்து, கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து நான்கு மணி நேரம் புளிக்க விடவும்.

4 தக்காளி, சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து,  விழுதாக அரைத்த மாவுடன் கலக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.

சூடான தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாகச் சுட்டு, கொத்தமல்லிச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
நன்றி : விகடன்   செய்திகள்  ஹெல்த்  (24/07/2015)

No comments:

Post a Comment