Tuesday, July 14, 2015

ராகி மசாலா ரிப்பன்

குழந்தைகளுக்கு டிபனைவிட, நொறுக்குத் தீனியின் மீதுதான் ஆசை அதிகம். வீட்டில் செய்யவில்லை என்றால், சுகாதாரமற்ற எண்ணெயில் செய்த கடைப் பலகாரங்களை வாங்கி, வயிற்றைக் கெடுத்துக்கொள்வார்கள். சிறுதானியங்களில் நொறுக்குத் தீனியை செய்து கொடுங்கள். சுவையும் அபாரமாக இருக்கும். உடலும் நலம் பெறும்.

செய்முறை

2 கப் கேழ்வரகு மாவு, அரை கப் பொட்டுக்கடலை மாவு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் பூண்டு (அ) வெங்காய விழுது, பெருங்காயத் தூள், சோம்புத் தூள் தலா கால் டீஸ்பூன் சேர்த்து, உப்புப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவுப் பதத்தில் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை 'சிம்'மில் வைத்து, முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சைப் பொருத்தி, மாவைப் போட்டு, காயும் எண்ணெயில் ரிப்பன்களாகப் பிழியவும். சிவந்ததும் எடுக்கவும்.

பலன்கள்

கேழ்வரகில் இரும்புச்சத்து, கால்சியம், அமினோ அமிலங்கள் அடங்கி இருக்கின்றன. சர்க்கரை நோயிலிருந்து விடுபடவும், உடல் வலுப்பெறவும், குடல் புண்ணை ஆற்றவும், பித்தம் தொடர்பான நோய்களைப் போக்கவும் கேழ்வரகு உதவுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் சூட்டைத் தணித்து, சருமத்தைப் பளபளப்பாக்கும். கேழ்வரகுடன், பொட்டுக் கடலை மாவையும் சேர்ப்பதால், குழந்தைகளின் வளர்ச்சி அதிகரித்து, உடல் நல்ல உறுதியைப் பெறும்.
நன்றி : விகடன்   செய்திகள்  ஹெல்த்  (14/07/2015)

No comments:

Post a Comment