Wednesday, July 8, 2015

குடலியக்கம் எவ்வித இடையூறும் இல்லாமல் ஆரோக்கியமாக செயல்பட

உடல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமெனில், குடலியக்கம் எவ்வித இடையூறும் இல்லாமல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில் குடல் தானே கழிவுகளை வெளியேற்ற பெரிதுவும் உதவி புரிகிறது. உடலில் சேரும் கழிவுகளானது சரியான நேரத்தில் வெளியேற்றப்படாமல் இருந்தால், உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.
குடலியக்கம் ஆரோக்கியமாக செயல்பட்டால், மனிதன் ஒரு நாளைக்கு 3 முறை மலத்தைக் கழிப்பான். ஆனால் தற்போது கண்ட உணவுகளால் உடலில் கழிவுகள் தேங்கிக் கொண்டே இருக்கிறதே தவிர, அது வெளியேறிய பாடில்லை. இதனால் பல்வேறு தீவிர ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக ஒருவன் ஒருநாள் மலம் கழிக்காவிட்டால், அவனால் எந்த ஒரு வேலையிலும் சரியாக ஈடுபட முடியாது. பல்வேறு தொந்தரவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் ஒரு ஆரோக்கியமான மனிதன் காலையில் எழுந்ததும் மலம் கழிப்பான். ஒருவேளை இல்லாவிட்டால் அவனுக்கு மலமிளக்கிகள் தேவை என்று அர்த்தம். அதற்காக கண்ட மாத்திரைகளைப் போட வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களின் படி நடந்து வந்தாலே, குடலியக்கத்தை சீராக்க முடியும். சரி, இப்போது குடலியக்கம் எவ்வித இடையூறுமின்றி ஆரோக்கியமாக செயல்பட சில டிப்ஸ்களைப் பார்ப்போம்.

கற்றாழை ஜூஸ் 
காலையில் எழுந்ததும் நீரில் சிறிது கற்றாழை ஜெல்லை ஊற்றி கலந்து குடித்தால், உடலில் தேங்கியுள்ள மலம் உடனே வெளிவரும்.
அருகம்புல் ஜூஸ் 
அருகம்புல் ஜூஸை காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், இறுகிய மலம் இளகி உடளே வெளியேறும். மேலும் அருகம்புல் ஜூஸ் செரிமான மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க அருகம்புல் ஜூஸ் உதவி புரியும்.
தயிர் 
தயிர் செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனையை சரிசெய்யும் குணம் கொண்டது. எனவே இரவு உணவில் தயிரை சேர்த்துக் கொள்வது, காலையில் மலம் வெளியேற உதவியாக இருக்கும்.
உலர்ந்த கொடிமுந்திரி 
உலர்ந்த கொடிமுந்திரியில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இவை இறுகிய மலத்தை இளகச் செய்து வெளியேற்றும். எனவே இவற்றை அன்றாடம் சிறிது உட்கொண்டு வாருங்கள்.
மிளகாய் 
மிகவும் காரமான உணவுகளை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் அளவாக உட்கொண்டு வந்தால், குடலியக்கம் தூண்டப்பட்டு, அது ஆரோக்கியமாக செயல்பட ஆரம்பிக்கும்.
தண்ணீர் 
தண்ணீரை விட சக்தி வாய்ந்த ஒன்று வேறு எதுவும் இல்லை. எனவே காலையில் எழுந்ததும், 2 டம்ளர் தண்ணீரைக் குடியுங்கள். பின் அதன் மகிமையைப் பாருங்கள். மேலும் நாள்தோறும் போதிய அளவில் தண்ணீரைக் குடித்து வாருங்கள்.
ஆப்பிள் 
ஆப்பிள் கூட குடலியக்கத்தை சீராக்கும். அதற்கு தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட வேண்டும். இதற்கு அதில் உள்ள பெக்டின் என்னும் மலத்தை இளகச் செய்யும் பொருள் தான் காரணம்.
காப்ஃபைன் வேண்டாம் காப்ஃபைன் உள்ள பானங்களை குறைத்துக் கொள்ளுங்கள். அதற்காக முற்றிலும் தவிர்க்க வேண்டாம். தினமும் ஒரு கப் காபி அல்லது டீ போதுமானது. ஏனெனில் காப்ஃபைன் செரிமான மண்டலத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்.
தினமும் உடற்பயிற்சி தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், குடலியக்கம் சீராக இருக்கும். மேலும் உடற்பயிற்சி செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
மன அழுத்தம் மன அழுத்தம் இருந்தால், குடலியக்கம் பாதிக்கப்படும். எனவே மன அழுத்தத்தைத் தவிர்க்கும் செயல்களில் ஈடுபடுங்கள். உதாரணமாக, யோகா, தியானம் போன்றவற்றை செய்து மனதை அமைதியாகவும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி : http://tamil.boldsky.com/health/wellness/2015/ten-tips-healthy-bowel-movements-008723.html

No comments:

Post a Comment