Thursday, July 9, 2015

ராகி வேர்க்கடலை அல்வா

ரு கிலோ கேழ்வரகை நீரில் ஊறவைத்து, வடித்து, முளைக்கட்டிய பின் காயவைத்து, மாவாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது சுவையான இனிப்பு மற்றும் கார உணவுகளைச் செய்யலாம். முழுமையான சத்துக்கள் சேர்ந்து,  உடலுக்கு வலுவைக் கூட்டும்.


ராகி வேர்க்கடலை அல்வா

100 கிராம் கேழ்வரகு மாவை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலக்கவும். கடாயில் ஒரு கப் பாலை ஊற்றி, கொதித்ததும் 100 கிராம் நறுக்கிய பூசணித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இதில், கால் கிலோ சர்க்கரை, கரைத்து வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் தோல் நீக்கிய 100 கிராம் வேர்க்கடலை, தேங்காய்த் துண்டுகள், முந்திரித் துண்டுகளை வறுத்து, அல்வாவில் சேர்த்து, கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்

நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாகச் செய்து தரலாம். உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இளம்  தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். ரத்தசோகையைத் தடுக்கும்.
நன்றி : விகடன்   செய்திகள்  ஹெல்த்  (07/07/2015)

No comments:

Post a Comment