Thursday, July 9, 2015

சோளம்

ரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சோளத்துக்கு முக்கிய இடம் உண்டு. சோளத்தை முழுதாக அல்லது உடைத்து, வேகவைத்து சாதமாகச் சாப்பிடலாம். அரைத்து மாவாக்கி, சப்பாத்தியாகவும் செய்யலாம்.
அதிக மாவுச்சத்து, கொழுப்பு, புரதச்சத்து நிறைந்து இருப்பதால், வெளிநாடுகளில் சோளத்தை அதிக அளவில் பயிரிடுகின்றனர்.

உடலுக்கு உறுதியைத் தந்து, ஆரோக்கியத்தைத் தக்கவைக்கும் சோள உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.

சோள ரவை கொழுக்கட்டை

செய்முறை:

கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில், கறிவேப்பிலைச் சேர்த்து, மூன்று கப் தண்ணீரை விடவும். பெருங்காயத்தைத் தண்ணீரில் கரைத்து ஊற்றி, தேங்காய்த் துருவல், உப்பு போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், ஒரு கப் சோள ரவையைப் போட்டு, அடுப்பை 'சிம்'மில் வைக்கவும். அடிக்கடி திறந்து கிளறிவிடவும்.

மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆறவைத்து, கொழுக்கட்டைகளாகப் பிடித்து, 10 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுக்கவும்.

பலன்கள்:
சோளத்தில் புரதம், மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டாகரோடின் போன்ற பல சத்துக்கள் உள்ளன. பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். சிறுநீரைப் பெருக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். மூல நோய் உள்ளவர்கள் சோளத்தைத் தவிர்ப்பது நல்லது.
நன்றி : விகடன்   செய்திகள்  ஹெல்த்  (04/07/2015)

No comments:

Post a Comment