உலகிலேயே அதிகம் பயிரிடப்படுகிற இரண்டாவது வகை தானியம் தினை. இதற்கு இறடி, ஏளல், கங்கு எனப் பல பெயர்கள் உள்ளன. நம் முன்னோர்கள், கேழ்வரகு, கம்பு, சோளம், தினை என நம் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிட்டு, உடலை திடகாத்திரமாக வைத்திருந்தனர்.

பலன்கள்
அதிக அளவு புரதச் சத்து கிடைக்கும். உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச்சத்துக்கள் நிறைந்தது. தினமும் குழந்தைகளுக்கு ஒரு தினை லாடு கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியத்துக்கு துணைபுரியும். இதயத்தைப் பலப்படுத்தும்.
உடல் வலு பெறும். பசியை உண்டாக்கும்.
தினை லட்டு
வெறும் கடாயில் சுத்தம் செய்த ஒரு ஆழாக்கு தினையை வறுத்துக்கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கட்டி அல்லது தேவையான அளவு வெல்லத்தைத் தூளாக்கிக்கொள்ளவும். தினை மாவு, வெல்லத்தூளுடன், தேன், தேங்காய்த் துருவல் தலா 4 டேபிள்ஸ்பூன் சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சிறிது தண்ணீர் விட்டு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.

21/07/2015
No comments:
Post a Comment