Saturday, July 25, 2015

ராகி வெங்காய தோசை

டலுக்கு முழுமையான சத்துக்களை அள்ளித்தருவதில் முளைக்கட்டிய தானியத்துக்குத்தான் முதலிடம். முளைகட்டிய தானியத்தில் செய்யும் பால், சாலட், கஞ்சி, பாயசம் என சகல உணவுகளும் சப்புக்கொட்டி சாப்பிடும் அளவுக்கு அபார ருசியுடன் இருக்கும். முளைகட்டிய கேழ்வரகு மாவில் செய்யும் இந்த தோசையை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
பலன்கள்
கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கும். அதிகம் எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்துச் சாப்பிடுவதன் மூலம், உடல் எடையைக் குறைக்கலாம். நார்ச்சத்து இருப்பதால் எளிதில் செரிமனமாகும். உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.
ராகி வெங்காய தோசை

செய்முறை: 2 பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டுக் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து, நன்றாக வதக்கிக்கொள்ளவும். ராகி மாவில் உப்பு சேர்த்துக் கரைத்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தோசை மாவுடன் கலந்து தோசைக்கல்லை காயவைத்து, மெல்லிய தோசைகளாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கும்போது, தோசையின் நடுவில் வதக்கிய வெங்காயத்தை வைத்து, சுட்டு எடுக்கவும்.

குறிப்பு

முளைகட்டிய கேழ்வரகை மாவாக அரைத்துப் பயன்படுத்தினால், தோசை வாசனையாக இருக்கும். சத்தும் சுவையும் கூடும். முந்தைய நாள் இரவே, ஒரு கப் கேழ்வரகு மாவைக் கரைத்து வைத்து, மறுநாள் பயன்படுத்தலாம். ஆனால், காலையில்தான் தோசை மாவைச் சேர்க்க வேண்டும். தோசை மாவுக்குப் பதிலாக, கோதுமை மாவைப் பயன்படுத்தலாம். கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல்  கரைத்து, ராகி மாவுடன் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.18/07/2015

No comments:

Post a Comment