Monday, July 13, 2015

கம்பு வெஜிடபிள் கஞ்சி

ணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கும் தானியம் கம்பு. இதில் அதிக அளவு புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், பீட்டாகரோட்டின், நியாசின், வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் இருக்கின்றன. தினமும் கம்பை சமைத்துச் சாப்பிடுவதன் மூலம், வைட்டமின் மற்றும் சத்துக்குறைப்பாட்டைப் போக்கலாம். ஆரோக்கியத்தைக் கூட்டலாம்.












கம்பு வெஜிடபிள் கஞ்சி

அரை கப், கம்பை நன்றாகச் சுத்தம் செய்து ஊறவைக்கவும். இதனுடன், மூன்று கப் வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து அரைத்த விழுது) அரை டீஸ்பூன் அளவுக்கு சீரகம், மிளகு, 1 பிரியாணி இலை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். வெந்ததும், பிரியாணி இலையை எடுத்துவிட்டு, கலவையை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, அரை டீஸ்பூன் கடுகு மற்றும் மூன்று பல் பூண்டு சேர்த்துத் தாளித்து, அரைத்த சூப் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் அல்லது ஸ்டாக் சேர்த்துக்கொள்ளலாம். இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்

ரத்தசோகை இருப்பவர்களுக்கு சரியான உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம். டீன் ஏஜ் பெண்கள், வளரும் குழந்தைகள், அடிக்கடி கம்பு உணவை சேர்த்துக்கொண்டால், உடல் நன்கு வலுப்பெறும். தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைச் சீராக்கும். சர்க்கரை நோயாளிக்கும் ஏற்றது. பார்வைத்திறன் மேம்படும். உடல் சூட்டைத் தணிக்கும். ஜீரணக் கோளாறு, வயிற்றுப் புண்கள், குடல் புண்களை ஆற்றும். மலச்சிக்கலைத் தடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும்.

No comments:

Post a Comment