Thursday, July 9, 2015

சிறுதானிய ரொட்டி

ன்று பெரும்பாலான வீடுகளில் இரவு நேரத்தில் சப்பாத்திதான் உணவாக இருக்கிறது. இதயநோய், சர்க்கரை நோய், ஒபிசிட்டி என நோயின் பாதிப்புகள் அதிகரித்திருப்பதுதான் இதற்கு காரணம்.
கோதுமையைப் பயன்படுத்தி மட்டுமே சப்பாத்தி செய்யாமல், சிறுதானியங்கள், பயறு வகைகளையும் சேர்த்து அரைத்து, சப்பாத்தி செய்வது உடலுக்கு வலுவைக் கூட்டும். இதனுடன் காய்கறி கலவைச் சேர்த்துக்கொண்டால், ஒட்டுமொத்த சத்தும் உடலில் சேரும்.
மல்டி கிரெய்ன் ரொட்டி

தேவையானவை: முழு கோதுமை, மக்காச்சோளம், முளைக்கட்டி காயவைத்த கேழ்வரகு, தோல் நீக்காத கறுப்புக் கொண்டைக்கடலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கொடுத்துள்ள தானியங்களை சம அளவு எடுத்து, நைஸாக அரைத்து மாவாக்கவும். இதை நன்றாகச் சலித்துக்கொள்ளவும். இந்த மாவைத் தேவையான அளவு எடுத்து, தண்ணீர் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து சப்பாத்திகளாக இடவும். தோசைக் கல்லில் சிறிது எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும்.

சுவையும் சத்தும் நிறைந்த இந்த மல்டி கிரெய்ன் ரொட்டியை, குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதற்குத் தொட்டுக்கொள்ள காய்கறிக் கலவையைக் கூட்டாகச் செய்து சாப்பிடலாம்.

பலன்கள்

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். கோதுமையில் தாது உப்புக்களும், முக்கியமான அமினோ அமிலங்களும் உள்ளன. சோளத்தில் வைட்டமின்கள், கேழ்வரகில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள், பருப்பு வகைகளில் புரதம் என மல்டி கிரெய்ன் ரொட்டியின் மூலம், அனைத்துச் சத்துக்களும் உடலுக்குக் கிடைத்துவிடும். அனைத்து வயதினரும் சாப்பிட ஏற்றது. வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம், நிறைவான ஊட்டச்சத்தை அவர்களுக்கு வழங்கலாம்.

நன்றி : விகடன்   செய்திகள்  ஹெல்த்  (09/07/2015)

No comments:

Post a Comment