Saturday, July 25, 2015

கேழ்வரகு மிச்சர்

ன்றைய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வசியப்படுத்தி விட்டது  நொறுக்குத் தீனி. உணவைக் காட்டிலும் நொறுக்குத் தீனியை அதிகம் திண்பதில் ஆர்வம் காட்டுவது ஆரோக்கியத்துக்கே வேட்டு வைக்கக்கூடும். கண்ட எண்ணெயில் செய்து விற்பனைக்கு வரும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும், உடலுக்கு நன்மையை தரக்கூடிய நம் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, சோளம், தினை, கம்பு என சிறுதானியத்தில் செய்யும் நொறுக்குத் தீனியை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால்... சுவைக்கு சுவை... சத்துக்கும் சத்து!

பலன்கள்
கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் இருப்பதால் உடலுக்கு வலுவைக் கூட்டுவதில் முதலிடத்தில் இருக்கிறது. இதுதவிர, பீட்டா கரோட்டின், நியாசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்த சோகையை தடுக்கிறது. தோல் அலர்ஜியை நீக்கும். சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் க‌ட்டுக்குள் இருக்கும். உடலுக்கு வலிமை தரும்.  உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

கேழ்வரகு மிச்சர்
200 கிராம் கேழ்வரகை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். அதில், தேவையான உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அந்த மாவை மிக்சர் பிழியும் நாழியில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனுடன், தலா 50 கிராம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பொரித்தஅவல் சேர்த்து கிளறவும். கேழ்வரகு மிக்சர் ரெடி! 20/07/2015

No comments:

Post a Comment