பூசணியின் மகத்துவம்
பூசணி கொடியில் காய்க்கும் காய். அதிக செலவு இல்லாமல் வீட்டு தோட்டத்திலேயே செழிப்பாக வளரக்கூடியது. இதில் விட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைவாக உள்ளன. பூசணிக்காயை சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்கும். ஆஸ்துமா, சர்க்கரை நோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்றவையும் வராமல் தடுக்கும் தன்மை உள்ளது. பூசணி சாறு சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்தலாம். இதில், பொட்டாசியம் அதிகளவில் உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
பூசணியில் உள்ள ‘ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்து உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று, நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. பூசணி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆற்றல் 23 சதவிகிதம் அதிகரிக்கும். சூரிய வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், சரும புண்களை ஆற்றவும், தழும்புகளை மறைய செய்யவும் பூசணிக்காயை சாப்பிட்டு வந்தால் பயனடையலாம். உடல் எடையை குறைக்க பூசணிக்காயை சாப்பிடலாம்.
உடலில் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்பதால், எந்த வயதினரும் பூசணிக்காயை சமைத்து சாப்பிடலாம். இதன் மூலம் நீரின் அளவினை சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும். பூசணிக்காய் தோலையும், விதை களையும் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் முடி நன்கு வளரும் பேன் தொல்லை இருக்காது.
பூசணிக்காயை வெயிலில் நன்றாக காய வைத்து இடித்துப் பொடி போல செய்து சாப்பிட்டு வர ரத்த வாந்தி, கோழை முதலியன குணமாகும்.
பழுத்த பூசணிக்காயை சாறாக்கி குடித்து வந்தால் உடல் வெப்பம் தணியும். குளிர்ச்சி உண்டாகும். சூடான தோசை வார்க்கும் தட்டில் பூசணியைப் பிழிய வேண்டும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அழுத்தினால் போதும். அதில் கிடைக்கும் சாறுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து அருந்த வேண்டும். இவற்றை தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப் புண் முற்றிலும் குணமாகும்.

No comments:
Post a Comment