Wednesday, October 29, 2014

இயற்கை மருத்துவம்,

வயிற்றில் வாய்வுத் தொந்தரவு
கேழ்வரகு, புழுங்கல் அரிசி கஞ்சி, பால் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வேளை கொடுக்கவும். மோர் எவ்வளவு அதிகம் சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்க்கவும். கோதுமைக் கஞ்சியும் பிறகு சப்பாத்தியும் கொடுக்கலாம். காய்கறிகள், தக்காளி, புளிப்பில்லாத திராட்சை, ஆரஞ்சு சாப்பிடலாம். வெந்த சோறு, புளி நீக்கிய பொரித்த குழம்பு, பொரித்த ரசம் சேர்க்கலாம்.
பனங்கல்கண்டு, புழுங்கல் அரிசி, மிளகு ஆகியவற்றைக் கலந்து வாயில் அடக்கிக் கொண்டால் இருமல் குறையும்; சித்தரத்தை அல்லது பிஞ்சுக் கடுக்காய் சிறு துண்டு வாயில் அடக்கிக் கொள்வதாலும், பாலில் இட்டுக் காய்ச்சிக் குடிப்பதாலும் உடனே இருமல் நீங்கும். இரவு படுக்கும் முன் வால்மிளகுத் தூளைப் பாலில் கலந்து காய்ச்சிப் பனங்கல்கண்டு இட்டுக் குடிக்க இருமல் போகும். வெகுநாள் இருமலை குறிப்பாக க்க்குவான் இருமலை நிறுத்த வாழை மரத்தின் அடிக் கிழங்குச் சாறு 2 தேக்கரண்டி குடிக்கலாம். ஒல்லியலில் (ஓமியோபதியில்) கக்குவான் இருமல்: டிராசிரா 200
மாதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். பழத்தைத் தேனில் ஊறவைத்து இருமலுக்குச் சாப்பிடலாம்.
வயிற்றுப்புண், அடிக்கடி அவசரமாக மலம்கழிக்கத் தூண்டுதல், வயிற்றுப் பொருமல், வயிற்றுப்புண் (அல்சர்) முதலியன காரத்தன்மை (அசிடிட்டி)யால் வருகின்றன; இதைப் போக்க நாள்தோறும் காலைச் சாப்பாட்டுக்குக் கால் மணி நேரம் முன்னர் 5 கிராம் (1 தேக்கரண்டி) புழுங்கல் அரிசியை வாயிலிட்டு மென்று விழுங்குக. முட்டைக்கோசு கொதிநீ (சூப்) நாள்தோறும் 1 வேளை குடிப்பதால் குடற்புண் ஆறும்.
கறிவேப்பிலைப் பொடி: கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி கீரைஇலைகளை நிழலில் உலர்த்தி, அதிமதுரம், கடுக்காய்,பெருங்காயம் சிறிது சேர்த்துப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்க. சுடுசோற்றில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இப்பொடியிட்டுக் கலந்து சாப்பிடலாம்; குழம்பு, சாறு (இரசம்) வைக்கும் போது சிறுது கலந்து கொள்ளலாம். இப்பொடியைச் சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவாகும்; இரும்புச் சத்து அதிகம் என்பதால் குருதியில் சிவப்பு அணுக்கள் மிகும்; கருவுற்ற பெண்கள், மாதவிலக்குச் சிக்கல் உள்ள பெண்கள் நாள்தோறும் சேர்த்துக் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment