Wednesday, October 22, 2014

தலைமுடி நன்றாக வளர தக்காளி

*தலைமுடி செழித்து வளர தக்காளி சூப்பர் மருந்து தெரியுமா? இரண்டு பெங்களூர் தக்காளியை ஜூஸ் அடித்து.. நோ..நோ! குடிக்கக்கூடாது. அப்படியே தலையில் பூசுங்கள். அரைமணி ஊறியதும் மைல்டு ஷாம்பூ போட்டு தலைமுடியை அலச வேண்டியதுதான். தக்காளியிலுள்ள அமிலம் நம் தலைமுடியின் காரத் தன்மை மற்றும் அமிலத்தன்மையை சரியான அளவு பாலன்ஸ் பண்ணுமாம். அதனால் முடி ஹெல்த்தியாகப் பளபளக்கும்.
* காபி ரொம்பப் பிடிக்கும். அட... குடிக்க இல்லீங்க! தலைக்கு ஊற்றிக் குளிக்க. பால் சேர்க்காமல் கால் கப் ஸ்டிராங் காபி டிகாக்ஷனைத் தலையில் நல்லா தேய்த்து இருபது நிமிடம் ஊறிய பிறகு தலையை அலசுங்கள். அருமையான ஒரு கரும் பிரவுன் நிறத்தில் கூந்தல் ஜொலிக்கும். காபி டிகாக்ஷன் மாதிரியே தலைமுடிக்கு ஒரு அலாதியான பளபளப்பு தருவது டீ டிகாக்ஷன். தலைக்குக் குளிக்கும்போது கடைசி கப் தண்ணீரில் கொஞ்சம் டீ டிகாக்ஷன் கலந்து தலையில் ஊற்றுங்கள். அதன்பிறகு, வெறும் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. தலைமுடிக்கு ஊட்டச்சத்தும் பளபளப்பும் கிடைக்க, முட்டையின் வெண்கருவை தலையில் பூசி ஊறி, சிறிது நேரத்துக்குப் பிறகு ஷாம்பு போட்டு அலசினாலும் கூந்தல் பளபளக்கும். 

No comments:

Post a Comment