Wednesday, October 22, 2014

சளித் தொல்லையில்லா மூலிகை கொசுவிரட்டி!

தேவையான பொருட்கள் : 
வேம்பு, நொச்சி, நுனா, ஆடாதொடா, ஆடு தின்னாப் பாளை, காட்டாமணக்கு, துளசி, திருநீற்றுப் பச்சிலை, தும்பை, காஞ்சாங்கோரை, துத்தி, பேய்மிரட்டி, மிளகாய்ப் பூண்டு, பப்பாளி, குப்பைமேனி, சீந்தில், செம்பருத்தி, நாகமல்லி, சிறியா நங்கை, குமர், கற்பூரவள்ளி.

செய்முறை : 
மேலே கண்ட மூலிகைகளில் கிடைத்தவற்றை சேகரித்து வந்து நிழலில் உலர்த்தி, ஓமவள்ளி, கற்றாழை, பசலை, ஆனை நெருஞ்சி ஆகியவற்றை எடுத்து இடித்துக் சாறு எடுத்து, வடித்த கஞ்சியுடன் மைதா கஞ்சியையும் கலந்து தேங்காய் நார்க்கழிவு கொஞ்சம் எடுத்து ஆல், அரசு, நொச்சி, வேம்பு, நுனா, மருதாணி போன்ற குச்சிகளைத் தேர்வு செய்து. மூலிகைப் பொடி, தேங்காய் நார்க்கழிவு கலவையை சோற்றுக் கஞ்சி, மைதா கஞ்சி, மூலிகைச்சாறு சேர்த்து பசைபோல் கலக்கி மேற்படி சாந்தை பென்சில் தடிமன் கொண்ட குச்சிகளில் அடிப்பாகம் நீங்கலாக மற்ற இடங்களில் பூசி வெயிலில் உலர்த்தி, குச்சியைக் கொளுத்திப் புகைய விட்டபோது... கொசுவும் கடிக்கவில்லை, மூக்கில் சளியும் பிடிக்கவில்லை.
நன்றி : பசுமை விகடன் 25 Apr, 2008
  • /

No comments:

Post a Comment