Thursday, January 8, 2015

அமிர்தப்பொடி – இது பத்திய ரசம் வைக்க உதவும்.

தேவையான பொருட்கள்:
தனியா – 1 சிறிய கிண்ணம் ஓமம்- அரைக் கிண்ணம் மிளகு- கால் கிண்ணம் சீரகம் -1 கிண்ணம் சுக்கு-உடைத்தது கால் கிண்ணம் கண்டதிப்பிலி 1 கிண்ணம் துவரம் பருப்பு- அரை கிண்ணம் காய்ந்த கறிவேப்பிலை நொறுக்கியது- அரை கிண்ணம்
பெருங்காயம் ஒரு கட்டி

செய்முறை:
இந்த பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளவும். வெயிலில் காயவைத்த புளியுடன் உப்பு சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தண்ணீரைக்கொதிக்க வைத்து அதில் புளி உப்பு பொடியும் அமிர்தப்பொடியும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பத்திய ரசம் தயார்.வயிற்றுப் பொருமல் , இரைச்சல், மந்தம் வாயு ஆகியவற்றைப் போக்கி உடல் கலகலப்பாகும்.
வெறும் வயிற்றில் சுடச்சுட சாதத்தில் போட்டு தளர சாப்பிட வேண்டும்.
வழிவழியாக நம் முன்னோர்கள் கண்ட கைவைத்தியச் சமையல் இது.

No comments:

Post a Comment