Thursday, January 1, 2015

வெந்தய கீரை - அத்திப்பழ சூப்

வெந்தய கீரை சூப் செய்வதற்கு தேவையான பொருட்கள் வருமாறு:- 

கீரை- ஒரு கட்டு, புளி சிறிதளவு, அத்திப்பழம்- 3 எண்ணம், திராட்சை 50 கிராம், 
தேன் சிறிதளவு. 
செய்முறை:- 

• கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். கழுவி தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். 

• அத்திப்பழத்தை தட்டி, சிதைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

• திராட்சையை நசுக்கி வைத்துக் கொள்ளவும். 

• சுத்தமான பாத்திரத்தில் தேவையான தண்ணீரை எடுத்து கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் கீரையை போட்டு மூடி விடவும். 

• சிறிது நேரத்துக்கு பின்னர் மூடியை திறந்து நன்றாக அவிந்த கீரைச் சாற்றை கிளறிட வேண்டும். 

• பின்னர் அத்திப்பழத்தையும், திராட்சையையும் அதில் கொட்டி வேகவிட வேண்டும். 

• பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்திட வேண்டும். 

• ஆறிய பின்னர் தேன் கலக்க வேண்டும். 

• சுவையான வெந்தய கீரை சூப் தயாராகி விடும். 

வெந்தய கீரை சூப்பின் மருத்துவ குணங்கள் பின்வருமாறு:- 

மேற்கூரிய வெந்தய கீரை சூப்பானது, தலை சுற்றல், உள் சுழல் மற்றும் பித்த கோளாறுகளை நீக்கி விடும். நாவறட்சி, இருமல், மூலநோய், குடல்புண் போன்றவை குணமடையும். வெந்தய கீரைக்கு தீராத வாய்ப்புண்ணை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. மலச்சிக்கல், வயிற்று கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால் நோய் நீங்கப் பெறுவார்கள். மூல நோய்கள், சுவாச கோளாறுகள், பெண்களின் மாத விடாய் கோளாறுகள் போன்றவற்றுக்கும் வெந்தய கீரை சூப் சிறந்த மருந்தாகும்.

No comments:

Post a Comment