Sunday, January 18, 2015

சிவப்பு அரிசி அடை

தேவையானவை: 
சிவப்பு அரிசி - ஒன்றரை கப், கடலைப்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து - கால் கப், மிளகு, சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன், மிகவும் சிறியதாக
நறுக்கிய தேங்காய் துண்டுகள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 10, வெங்காயம் - ஒன்று, 
இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 
• அரிசி மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியே 4 மணி நேரம் ஊற வைத்து பின்னர் அவற்றை ஒன்று சேர்த்து மிளகு, சீரகம், சோம்பு, தோல் சீவிய இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். 
• மாவுடன் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். 
• தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். 
• தேங்காய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

No comments:

Post a Comment