Saturday, January 3, 2015

கரிசலாங்கண்ணி பருப்புக்கூட்டு

தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-
கீரை- ஒரு கட்டு, தேங்காய் துருவல் - சிறிதளவு, வத்தல்- 4, தேவையான அளவு புளி, 
சிறிய வெங்காயம்- 4, தேவையான அளவு உப்பு, துவரம் பருப்பு- 150 கிராம், 
வெங்காயம்- 4, பச்சை மிளகாய்-2, தேவையான அளவு சமையல் எண்ணெய், 
தக்காளி- 4, கடுகு ஒரு தேக்கரண்டி, சிறிதளவு கறிவேப்பிலை, பூண்டு 6 பல், 
மஞ்சள் தூள் 2½ தேக்கரண்டி, சீரகத்தூள்- 2½ தேக்கரண்டி. 

செய்முறை:- 
• கீரையை தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 
• தேங்காய், புளி, வத்தல், சிறிய வெங்காயம், பூண்டு இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். 
• தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயினை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 
• துவரம் பருப்பில் கல் நீக்கி சுத்தப்படுத்திக் கொள்ளவும். 
• அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி, தேவையான தண்ணீரில் பருப்பை வேகவிடவும், பருப்பு வெந்த பிறகு அதில் கீரையை கொட்டி ஒரு கொதி நிலைக்கு வேகவிடவும், தேவையான உப்பை போட்டு, மஞ்சள், சீரகத்தூள் சேர்க்கவும். 
• அரைத்த விழுதை கொட்டி கிளறவும், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வேக விடவும், மிகவும் கெட்டியான பதத்தில் இருக்குமானால் சிறிது தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும். 
• நன்றாக வெந்த நிலையில் மற்றொரு கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கீரை கூட்டில் கலந்து இறக்கி விட வேண்டும். 
• இப்போது சாப்பிடுவதற்கு சுவையான கரிசலாங்கண்ணி கீரை பருப்பு கூட்டு தயாராகி விடும்.

No comments:

Post a Comment