Thursday, January 8, 2015

வாழைப்பழ முட்டை தோசை!!!

தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 1 (நன்கு கனிந்தது) முட்டை – 2 சர்க்கரை – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தினை நன்கு மசித்து கொள்ளுங்கள்.
பின்பு, முட்டை இரண்டையும் நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
பின் முட்டையுடன் தேவையான அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.
அடுத்து, மசித்து வைத்த வாழைப்பழத்தினை முட்டையுடன் சேர்த்து நன்கு மாவு போல் அடித்துக் கொள்ளவும்.
தற்போது இதனை தோசை கல்லில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து சாப்பிட்டால்… ருசி அள்ளும்…!
குறிப்பு: சர்க்கரைக்கு பதில் உப்பு சேர்த்தும் இதனை செய்யலாம்.

No comments:

Post a Comment