Monday, January 5, 2015

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை சூப்

தேவையான பொருட்கள் வருமாறு:- 
மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை-½ கட்டு, கொத்தமல்லி இலை-¼ கட்டு, கறிவேப்பிலை, மஞ்சள், பூண்டு -சிறிதளவு, வெங்காயம்-1, பச்சை மிளகாய்-1, உப்பு- சிறிதளவு. 
செய்முறை:- 
• கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 
• கொத்த மல்லி இலையையும் சுத்தம் செய்து, ஆய்ந்து வைத்துக் கொள்ளுங்கள். 
• மஞ்சள், பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, அம்மியில் அரைத்துக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான தண்ணீர் விட்டு, கொதிக்க விட வேண்டும். நன்றாக தண்ணீர் கொதிக்கும் போது, அதில் கீரையை போட்டு வேகவிடவும். 
• சற்று வெந்த பின்பு, அரைத்த விழுதை அதில் போடவும். பின்னர் மல்லி இலையை சேர்க்க வேண்டும். 
• மீண்டும் நன்றாக கொதிக்கும் வரை காத்திருந்து, தேவையான அளவு உப்பு போட வேண்டும். 
• இப்போது கரிசலாங்கண்ணி கீரையில் சூடான சூப் தயார் ஆகிவிடும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, இளம்சூட்டில் பருகலாம்.

No comments:

Post a Comment