Thursday, January 8, 2015

தீயல்

(தீயல் என்பது திருநெல்வேலியின் அல்வாவைப்போல் சிறப்பு மிகுந்தது)
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல், வெங்காயம், வெண்டைக்காய், கருணைக்கிழங்கு, கத்தரிக்காய், புளி
செய்முறை:
கொஞ்சமா தேங்காயை துருவி எடுத்து வச்சுக்கனும், அப்புறம் சின்ன வெங்காயம் கொஞ்சம் ரெண்டையும் வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கணும். தேங்காய் துருவல் பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து மிக்சியில போட்டு அரைச்சு எடுத்துக்கணும். பின்பு வெண்டைக்காய், கருணைக்கிழங்கு, கத்தரிக்காய் இதெல்லாம் நறுக்கி ,மிக்சியில அரச்சதையும் நறுக்கிய காய்கறியையும் சேர்த்து தேவையான
அளவுக்கு கார சமாச்சாரங்கள்,உப்பு இவற்றை எல்லாம் சேத்து தண்ணி விட்டு லேசா கொதிக்க விடனும். அப்பறம் புளிக்கரைசல் சேர்த்து கொதிச்ச பிறகு. கடைசியா தாளிக்கணும்.
குறிப்பு: தீயல் கருப்பா வந்ததுனா நீங்கதான் சமையல் கில்லாடி
தீயல் செய்யும்போது சிறிது கெட்டியாக வர வேண்டும் என்றால் வறுக்கும்போது 1 ஸ்பூன் உளுந்து சேர்த்து வறுப்போம் ... ருசியில் வித்தியாசம் இருக்காது ... இதே செய்முறை உருளைக்கிழங்கு வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து செய்யலாம் ...இதற்கு சின்ன வெங்காயம் தேவையில்லை .

No comments:

Post a Comment