Sunday, January 18, 2015

எள்ளோரை

தேவையான பொருட்கள் :
அரிசி - ஒரு டம்ளர் ( 200 கிராம்) 
பொடி செய்ய :
எள் - ஒரு தேக்கரண்டி; உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி; காய்ந்த மிளகாய் - மூன்று;
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு;  உப்பு - அரை தேக்கரண்டி; நல்லெண்ணை - இரண்டு தேக்கரண்டி
தாளிக்க :
நல்லெண்ணை - இரண்டு தேக்கரண்டி; கடுகு - அரை தேக்கரண்டி; கறிவேப்பிலை - சிறிது
நிலக்கடலை - தேவையான அளவு; கடலைப்பருப்பு - தேவையான அளவு
செய்முறை :
சாதத்தை உதியாக வடித்து ஆறவைக்க வேண்டும்.
எள்ளை கல்லிலாமல் களைந்து வறுத்து எடுத்து விட்டு அதே வானலியில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணை ஊற்றி மீதி உள்ளவற்றையும் வறுத்து எள்ளையும் சேர்த்து பொடி செய்து சாதத்தில் தூவி நன்றாக கிளற வேண்டும்.
பிறகு மீதி இருக்கும் எண்னையில் கடுகு, கறிவேப்பிலை, பருப்புகள் போட்டு தாளித்து கொட்டி கிளறி இரக்க வேண்டும்.

No comments:

Post a Comment