Sunday, January 18, 2015

எஃக் 65

தேவையான பொருட்கள்:                                                                                                                                                     முட்டை – 4; சோம்பு – 1 ஸ்பூன்; பூண்டு – 5; சின்ன வெங்காயம் – 5; மிளகாய் தூள் – 1
சீரகம் – ½ ஸ்பூன்; சோள மாவு – தேவையான அளவு; உப்பு, எண்ணெய் – தேவையான அளவு ;கறிவேப்பில்லை – சிறிதளவு
செய்முறை:
முட்டையை வேகவைத்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். (ஒரு முட்டையை நான்கு அல்லது இரண்டு துண்டுகள்) சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, சீரகம், மிளகாய் தூள் மற்றும் கறிவேப்பிலை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
வெட்டிவைத்த முட்டை துண்டுகளின் மீது இக்கலவையை பூசி ½ மணி நேரம் ஊறவைத்து, பின்னர் எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான எஃக் 65 ரெடி.!!

No comments:

Post a Comment