Thursday, November 20, 2014

வில்வஇலை

கண் வலி, கண் சிகப்பு, கண் அரித்தல் போன்ற நோய்களை குணமாக்கும் 
இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.
வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும்.
நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொற்று வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும்.வெட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.
ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயிற்று வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.
இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும். மந்தத்தைப் போக்கும்.
பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிர்க்கும். பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை – கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது .
வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.
பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காய்ச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும்.
வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.
விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.
நுரையீரல்தொடர்பாக ஏற்படும் நோய்களை வில்வம் குணப்படுத்துகிறது. சளி, இருமல், கபம் கட்டிக் கொள்ளுதல், மூச்சுவிட இயலாத தன்மை (ஆஸ்துமா) போன்றவற்றிற்கு வில்வம் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தினமும் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து இலைகளை மென்று உட்கொள்ள வேண்டும்.
இதயத்தைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துகிறது. மனித உடலிலுள்ள ரத்தத்தைத் தூய்மை செய்கிறது. சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. வயிற்றிலே தோன்றும் அஜீரணக் கோளாறுகளை அகற்றுகிறது. வாயுத் தொல்லையை விரைவில் அகற்றும் தன்மையை உடையது. வில்வ இலைகளை மசிய அரைத்து, வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து பருக வேண்டும்.
தலையிலே ஏற்படும் வழுக்கையை அகற்றி, மீண்டும் கூந்தலை வளரச்செய்யும் ஆற்றல் வில்வப் பழத்தின் தோலிற்கு உள்ளது. குறைந்த தீயில் வில்வப் பழத்தின் தோலைச் சுட்டு, அதை வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வந்தால், பலன் தெரியும். நூறு ஆண்டுகள் ஆன வில்வ மரத்தின் இலைகள் குஷ்டத்தைக் குணப்படுத்துகின்றன. தினமும் வெறும் வயிற்றில் கைப்பிடியளவு வில்வ இலைகளை 1 மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து உட்கொண்டால் குஷ்டம் குணமாகும் என மருத்துவ நூலகள் கூறுகின்றன. சாப்பிட்ட உடன் 108 முறை கோயிலை வலம் வரவும் கூறுகின்றன . இல்லையில் இலை ஜீரணம் ஆகாது என்பதுதான் அதன் உட்ப்பொருள் .
வில்வ வேரை 10 - 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர, தேவையில்லாத விந்து வெளியேற்றத்தைத் தடுத்து, விந்துவைப் பெருக்கும். ஆண்மையை அதிகரிக்கும்
ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத் திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரைமட்டும் அருந்தி னால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், வாத தோஷம் போகும் .
அதிக அளவு புரதம் அதன் கனியில் உள்ளது .அதிகஅளவு சீத பேதி மட்டும் மல கழிவுக்கு வில்வகனி சிறந்த நிவாரிணி .
பாதி கனிந்த பழத்தை சதையை நல்லெண்ணையில் ஒரு வாரம் ஊறவைத்து குளிக்கும் போது உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சரும நோய்,மற்றும் உடம்பு எரிதல் குணமாகும் .
சோகை நோய்க்கு அதன் காயை சதைபத்தை எடுத்து காயவைத்து அதை போடி செய்து , 10 கிராம் பொடிக்கு 50 கிராம் பசு நெய் சேர்த்து நாள் ஒன்றிக்கு இருமறை ஒரு மண்டலம் உபயோகிக்க குணமாகும் .
ரத்த அழ்த்ததிர்க்கு இலையை சாறுபிழுந்து உபயோகிக்க குறையும் . விலவ இல்லை காற்றை சுத்தமாக்கும் . வில்வ பழத்தை தொடர்ந்து உபயோகிக்க சக்கரை வியாதி குணமாகும் .
மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்- சுமார் 100 வில்வ இலைகளின் சாரை பத்து மிளகின் தூளுடன் கலக்கவும் .இதை காலை மாலை இருவேளையும் குடித்துவர தீவிர மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் .இதை அருந்தும் போது கூடவே ஐந்து கோப்பை கரும்பின் சாரையும் குடிக்கவும் .இது ஒரு ரகசிய அனுபவ முறை .
டைபாயிடு எனப்படும் தொடர்ந்து தாக்கும் அதிக சுரத்தை குணப்படுத்த சுமார் 200 இலைகளை சாறு இடுத்து அதை சுண்டக் காய்ச்சி ( 1/3) அது வற்றியபின் அதனுடன் சிறிது தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட குணமாகும் . வெண்ணையுடன் சேர்த்து வில்வப்பழத்தின் குழம்பு சிறிது சக்கரையுடன் தொடர்ந்து சாப்பிட புத்தி கூர்மையும் ,தேஜசும் கிடைக்கும்.

No comments:

Post a Comment