Wednesday, November 5, 2014

துளசி மருத்துவம்

எளிய காயகல்பம் துளசி ஆகும். காலை குளித்தப்பின் 5 துளசி இலைகளை உண்டு நீர் குடியுங்கள். கால் மணி நேரம் கழித்து உணவு உட்கொள்ளுங்கள். தவறாமல் இப்படி செய்தால் நரை, திரை, மூப்பு, பிணி இன்றி நீண்ட ஆயுள் பெறலாம்.
10 துளசி இலைகளைப் பசும்பாலில் போட்டுக் காய்ச்சிக் கொடுத்தால் குழந்தைகளுக்குரிய எந்த நோயும் வராமல் தடுக்கலாம்.

எந்த இதய நோய்க்கும், பழுதுபட்ட இதயத்திற்கும் துளசி சரியான இயற்கை மருந்து. துளசிச்சாறு 5 துளி, தேன் 20 துளி கலந்து வெந்நீரில் ஒரு தேக்கரண்டி சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சுமார் ஒரு மாதத்தில் குணம் தெரியும்.
 எந்த விதமான விஷக்கடியானாலும் துளசி வேரை அரைத்துப் பூசினால் விஷம் முறியும். 
காய்ச்சல் வருவதுபோல அல்லது ஜலதோஷம் பிடிப்பது போல இருக்கிறதா? புது இடத்தில் பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டுப் பயப்படுகிறீர்களா? கொஞ்சம் துளசி இலைகளை மென்று தின்றால் தொற்று நோய்க்கிருமிகள் உங்கள் உடலில் வேலை செய்யாது. 
தீராத தலைவலி, பார்வை மங்கல், தூரப்பார்வை, மாலைக்கண்நோய், முற்றிய குஷ்டரோகம், வெண்குஷ்டம், பல்வலி, வயிற்றுப்பூச்சித் தொல்லை, தலையில் பேன் இவற்றை குணப்படுத்துவதில் துளசி முக்கிய பங்கு வகிக்கிறது

No comments:

Post a Comment