Monday, November 24, 2014

பல்லில் கரை போக வழி

என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒரு முறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே அவர்களின் பற்களை சுத்தம் செய்துகொண்டு வரச்சொல்வது தான்..
நீண்ட நாட்களாக இருக்கும் கறைப்படிவங்களை சுத்தம்செய்வது மிகவும் எளிது.
பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (potassium permanganate) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி வெதுவெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கருஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..
கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.
ஆயிர கணக்கில் செலவழிப்பதை விட்டு விடுங்கள் ...

No comments:

Post a Comment